பக்கம்:கண் திறக்குமா.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

59

யில்லாமல் அதலபாதாளத்தில் விழுந்து கிடப்பது போலிருந்தது. அதிகாரிகளான அரக்கர்கள் அந்தத் தலைக்கு ஒரு செங்கல்லைக்கூடக் கொண்டுவந்து வைத்துக்கொள்ள என்னை அனுமதிக்கவில்லை - ஏன் தெரியுமா? கல்லைக் கொண்டு கைதி தற்கொலை செய்துகொண்டு விடுவானாம் - என்னக் கவலை, என்னக் கவலை! - அந்தக் கவலையில் அவர்களுக்குத் தூக்கம் பிடித்ததோ என்னவோ, எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை!

பொழுது புலரும் சமயம்; சிறிது கண்ணயர்ந்தேன். என்னுடைய கவலையை அதிகமாக்கக்கூடிய ஒரு கனவு:

அம்மா அசைவற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டிருக்கிறார்கள். மூச்சு மட்டும் லேசாக உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக இருக்கிறது. நானும், சித்ராவும் கண்ணீர் வழியும் கண்களுடன் கட்டிலின் அருகே நின்று கொண்டிருக்கிறோம். அம்மாவின் கண்கள் அடிக்கடி இப்படியும் அப்படியுமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. அந்த நிலையில் அடிக்கொரு தரம் அவர்கள் வாசலை நோக்கி யாரையோ ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு யாரோ வரும் காலடி ஓசை கேட்கிறது. அம்மா கண் விழித்துப் பார்க்கிறார்கள். வருபவர் டாக்டர் என்று அறிந்ததும், அவர்கள் முகத்தில் ஏமாற்றத்தின் சாயை படர்கிறது. அவர் வந்து அம்மாவைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பேசாமல் போகிறார். சித்ரா ஓடோடியும் சென்று அவரை ஏதோ விசாரிக்கிறாள். அப்பொழுதும் அவர் பேசாமல் கையை விரித்துவிட்டுச் செல்கிறார்.

டாக்டரைப் போல் சித்ராவால் எந்த விதமான உணர்ச்சியையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அவள் ‘கோ’வென்று கதறிக்கொண்டே அம்மாவின் அருகே வருகிறாள். அம்மா அவளைத் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/62&oldid=1379052" இலிருந்து மீள்விக்கப்பட்டது