பக்கம்:கண் திறக்குமா.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

63

 விட்டுவிட்டு இன்று கூட என்னால் இங்கே வந்திருக்க முடியாது - இப்பொழுது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? - பேசாமல் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வெளியே வருகிறீர்களா, இல்லையா?

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரிய வில்லை; தரையைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.

‘'பெற்ற தாய்க்கும் மேலாக உலகத்தில் வேறு என்ன இருக்கிறது அண்ணா? - ஒரு வரி, ஒரே ஒருவரி - ‘'என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று எழுதிக் கொடுத்து விடுங்கள்.’'

அதற்குமேல் ஒரு கணங்கூட நான் அங்கே நிற்க வில்லை - நின்றால் என் மனம் பேதலித்து விடும்போல் இருந்தது. சட்டென்று உள்ளே வந்து கதவை அடைத்துக் கொண்டு விட்டேன். அதற்குப்பிறகு 'அவள் என்ன ஆனாள்?’ என்றுகூட நான் கவனிக்கவில்லை; கவனிக்கவேயில்லை!

இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் எனக்கு அந்தச் செய்தி கிட்டியது - ‘தாயார் மறைந்தார்கள்’ என்னும் செய்திதான் அது.


6. நாளைக்கு விடுதலை

ங்களைத் தாங்களே' இல்லை’ என்று சொல்லிக் கொள்ளும் வேதாந்திகள், தங்கள் உடலை மட்டும் சிறைச் சாலையாகக் கருதுவதில்லை, உலகத்தையே சிறைச் சாலையாகக் கருதுகிறார்கள். அவர்களைப்போலவே தேசபக்தர்களிலும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சிறைச்சாலையை மட்டும் சிறைச்சாலையாகக் கருதுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/66&oldid=1379428" இலிருந்து மீள்விக்கப்பட்டது