பக்கம்:கண் திறக்குமா.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

கண் திறக்குமா?

குறைத்துக்கொண்டு, ‘அவர் எப்படியிருப்பார், அவர் எப்படியிருப்பார்?’ என்ற ஆவலை ஏதும் அறியாத மக்களிடையே தூண்டிவிட வேண்டும்; அதற்காகத் தங்கள் வீரப் பிரதாபங்களைப் பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளியாகும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் - அப்படிச் சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லையென்றாலும் பாதகமில்லை; ‘நேற்று அங்கே போனார். இன்று இங்கே வந்தார்!’ என்பன போன்ற தகவல்களை மட்டும் வெளியிட்டால் கூடப்போதும் ‘ஏன் போனார், ஏன் வந்தார்?’, ‘யாருக்காகப் போனார், யாருக்காக வந்தார்!’ என்று யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற பயம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வேண்டாத சங்கதி - ஏன் தெரியுமா? - தமிழ் மக்கள் இன்னும் அவ்வளவு தூரம் ‘புத்திசாலிக’ளாகி விடவில்லை!”

“நாசமாய்ப் போச்சு!”

“சொல்வதைக் கேளப்பா! - இன்னும் பெரிய மனிதர்களானவர்கள் - அல்லது, ஆக்கப்பட்டவர்கள் அடிக்கடி அறிக்கைகள் வெளியிடலாம். அவற்றைத் தயார் செய்யத் தங்களுக்குத் தெரியவில்லையென்றால், தெரிந்தவர்களைக் கூலிக்கு மாரடிக்க வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று - அந்தக் ‘கூலிக’ளுக்கு நம்முடைய பலவீனம் தெரிந்துவிடக் கூடாது. அதற்காக அவர்கள் செய்யும் காரியங்களிலெல்லாம் வேண்டுமென்றே ஏதாவது குற்றங்குறைகள் கண்டுபிடித்து, ‘அது சொத்தை, இது சொள்ளை’ என்று சொல்லி, அவர்களை அடிக்கடி மட்டந்தட்டிக் கொண்டிருக்க வேண்டும் - எந்தப் பைத்தியக்காரனாவது நம்மை ‘அபூர்வப் பிறவி’ என்று நினைத்துக் கொண்டு பார்க்கவந்தால், அவனுக்கு லேசில் பேட்டி அளித்துவிடக் கூடாது - ‘அவர் அவசர வேலையாயிருக்கிறார்’, ‘டாக்டர் யாரையும் பார்க்கக் கூடாது என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/89&oldid=1378748" இலிருந்து மீள்விக்கப்பட்டது