பக்கம்:கண் திறக்குமா.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கண் திறக்குமா?

“உங்களுடைய அவநம்பிக்கையை நீங்கள் முதலில் விட்டொழிக்க வேண்டும்.”

“சரி, விட்டொழித்து விடுகிறேன்.”

“தேச விடுதலைக்காகத் தியாக அக்கினியில் குதித்திருக்கும் காங்கிரஸ்காரர்களை நீங்கள் நம்ப வேண்டும்.”

“நம்புகிறேன் அப்பா, நம்புகிறேன்; அவர்களைப் பின்பற்றி, “நானும் தியாக அக்கினியில் குதித்திருப்பதிலிருந்தே அது உனக்குத் தெரியவில்லையா? ஆனால் மக்களின் நல்வாழ்வுக்குக் கடவுளையும், கைராட்டையையும் அவர்கள் நம்புவதைப் பார்க்கும்போதுதான் என்னுடைய நம்பிக்கை ஆட்டங் கண்டு விடுகிறது. ஏனெனில், கடவுளாலும், கைராட்டையாலும் இந்த நாட்டின் பொருளாதாரம் ஒரு நாளும் முன்னேறாது என்பது என் அபிப்பிராயம். பொருளாதார முன்னேற்றமின்றி இந்த நாட்டுக் குழந்தைகள் சர்க்கார் செலவில் கல்வியறிவு பெறுவதென்பது கனவிலும் நடக்காத காரியம்.”

“இந்த அபிப்பிராயம் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு உண்டு. ஆனால், அதைத் தைரியமாக எடுத்துச் சொல்வதற்குரிய காலம் இன்னும் வரவில்லை. அந்தக் காலம் வரும்போது நாங்கள் காங்கிரஸைக் கைப்பற்றிக் கடவுளையும், கைராட்டையையும் ஒழித்துக் கட்டத் தயங்க மாட்டோம்!”

“இது நடக்காத காரியம் தம்பி, நடக்காத காரியம்! அந்தக் காலம் வருவதற்குள் என்னைப் போன்றவர்கள் காங்கிரஸை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு விடுவார்கள். அப்புறம் எங்களுடைய செல்வாக்கை மீறி நீங்கள் ஒன்றும் செய்துவிட முடியாது!”

இந்தச் சமயத்தில் சாந்தினியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருந்த கார் திரும்பி வந்து வாசலில் நின்றது. அதிலிருந்து டிரைவர் கீழே இறங்கி வந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/93&oldid=1378767" இலிருந்து மீள்விக்கப்பட்டது