பக்கம்:கண் திறக்குமா.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

91

“அம்மா சாயந்திரம் வண்டி வேண்டாம்னு சொன்னாங்க!” என்றான்.

“ஏனாம்?” என்று பரந்தாமன் கேட்டார்.

“யாரோ ஒரு சிநேகிதி வீட்டுக்கு அம்மா போறாங்களாம்; திரும்பி வருவதற்குக் கொஞ்ச நாழியாகும்னு சொல்லச் சொன்னாங்க!” என்றான் அவன்.

“சரி, போ!” என்று சொல்லிவிட்டுப் பரந்தாமன் கைக் கடிகாரத்தைப் பார்த்தார். மணி பத்தரை ஆகியிருந்தது - “சாப்பிடுவோமா?” என்றார்.

அதே சமயத்தில், “இலை போட்டாச்சு!” என்று சொல்லிக்கொண்டே அங்கு வந்து நின்றான் சமையற்காரன். இருவரும் எழுந்து சென்று சாப்பிட்டுவிட்டு வந்தோம்.

“பகலில் நீங்கள் தூங்குவதுண்டா?” என்று கேட்டார் பரந்தாமன்.

எனக்குப் பகலில் தூங்கும் பழக்கம் இல்லையென்றாலும் அவருடைய தொணதொணப்பிலிருந்து தப்புவதற்காக “உண்டு” என்று சொல்லி வைத்தேன்.

“சரி, படுத்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி விட்டு அவர் எழுந்தார்.

“இன்னொரு விஷயம்; மூன்று மணிக்கெல்லாம் இங்கிருந்து கிளம்பிவிடப் போகிறேன்!” என்றேன் நான்.

“எதற்காக?” என்று அவர் கேட்டார்.

“ஊருக்குப் போவதற்காகத்தான்!”

“இரவு எட்டரை மணிக்குத்தானே வண்டி?”

என்னுடைய நிலைமை தர்மசங்கடமாகப் போய் விட்டது. இந்தக் கேள்விக்கு அரிச்சந்திரனாயிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பானோ? - ஒருவேளை, ‘உங்கள் அருமைக் குமாரி சாந்தினி என்னை நாலு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/94&oldid=1378773" இலிருந்து மீள்விக்கப்பட்டது