பக்கம்:கண் திறக்குமா.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

கண் திறக்குமா?


நான் சிரித்துவிட்டு, ‘சிறையில் இருந்தபோது எனக்கு நீ ஏன் கடிதங்கூட எழுதவில்லை?’ என்று கேட்டேன்.

“அதை நீங்கள் எதிர்பார்த்தீர்களா, என்ன?’ என்று அவள் திடுக்கிட்டுக்கேட்டாள்.

‘எதிர்பார்க்காமல் கூட இருந்திருக்க முடியுமா?”

‘எனக்குக் கடிதம் எழுதவேண்டுமென்று ஆசைதான். ஆனால், உங்கள் அமைதியை அது குலைத்து விடுமோ என்று பயந்து பேசாமல் இருந்துவிட்டேன்.”

“என்று நீ என்னை மறவாதீர்’ என்று சொல்லி விட்டுப் போனாயோ, அன்றேதான் என் அமைதி குலைந்து விட்டதே!’

“அப்படியானால் நான் குற்றவாளிதான்!”

‘'நீ மட்டுமென்ன, நானும் குற்றவாளிதான்!”

‘அது சரி, உங்கள் மாமாவின் குடும்பம் சோம்பேறிக் குடும்பமோ?”

இந்தக் கேள்வி என்னைத் தூக்கி வாரிப் போடுவது போலிருந்தது. ஒன்றும் புரியாமல், ‘ஏன், இல்லையே?’’ என்றேன்.

‘பின், பரம்பரை பரம்பரையாகவே பணக்காரக் குடும்பமோ?”

“ஆமாம்.”

“அதைத்தான் நானும் சொல்கிறேன் - சோம்பேறிக் குடும்பம் என்றால் என்ன, பணக்காரக் குடும்பம் என்றால் என்ன? - இரண்டும் ஒன்றுதானே?”

அவள் சிரித்தாள்; நானும் சிரித்தேன்.

“ஆமாம், உங்கள் மாமாவின் மகன் ஒருவன் ஒரு வேலையும் செய்யாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக் கிறானாமே, உண்மைதானா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/99&oldid=1379136" இலிருந்து மீள்விக்கப்பட்டது