24
கதம்பம்
வில்லை, சொல்லிக்கொண்டே இருந்தான்—கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தான்—யாராவது ஒருவர் தன் வார்த்தையிலே நம்பிக்கை கொள்வார்கள் என்ற எண்ணத்தை அவன் கைவிடவில்லை.
அரசுகளை விரிவாக்கிக் கொள்ளவும். செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளவும், ஆவல் கொண்ட மன்னர்களிடம் சென்றான், கொலம்பசின் திட்டம், வெறும் கனவு அல்லது எத்தனின் ஏற்பகடு—அல்லது பித்தனின் உளறல்—என்றே எவரும் கருதினர்.
ஜினிவா குடியரசுக்காரரிடம் கூறிப் பார்த்தான் போர்ச்சுகல் மன்னரிடம் பேசிப் பார்த்தான்; பிரிட்டிஷ் மன்னனுக்குச் சேதி அனுப்பிப் பார்த்தான்; எங்கும் ஏளனம், அலட்சியம், இவைகளே பதிலாகக் கிடைத்தன.
ஸ்பெயின் அரசரிடம் கூறுவோமென்றெண்ணி பல முறை அவரைக் காண முயற்சித்தான்; சுலபமான காரியமா? கொலம்பஸ் என்ன கொற்றவனா! அரச தூதனா! ஆஸ்தானக் கவியா! இல்லை, ஆடலழகியா! சுலபத்திலே பேட்டி கிடைக்க,
மிகச் சிரமப்பட்டுத்தான் ஸ்பெயின் நாட்டரசன் பெர்டினாண்டை பேட்டி கண்டான்—தன் திட்டத்தைச் கூறினான்,
“மூன்று கலங்கள்! உடன்வரச் சில ஆட்கள்! கொஞ்சம் பொருள்! உமது ஆசி! இவைகளைத் தாருங்-