பக்கம்:கதாநாயகி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 91


சிகிச்சைக்குரிய கட்டணத் தொகையை டாக்டரம்மாளிடம் கொடுத்துவிட்டு, மங்கையர்க்கரசியிடம் சென்றான். அவளுக்கு ஆறுதல் சொன்னான்: "தவறுகளை உணர்கிறதுதான், வாழ்க்கையிலே கிடைக்கக்கூடிய மகத்தான ஆறுதலாகும். இந்த வாழ்க்கையிலே, உனக்கும் ஒரு பெருமையுண்டு. மிச்சமிருக்கிற வாழ்க்கையை நீ நல்லவிதமாய் வாழ்ந்தால் போதும், நாணயமான உன் வயிற்றுப் பிழைப்புக்கு நான் வழிகாட்டுறேன். நானும் என் தவற்றை சிலமணிநேரத்திலேருந்துதான் புரிஞ்சு உணர்ந்துக்கிட்டேன். ஊர்வசியைப் பத்தி உனக்கிட்டே நான் சொல்லிவிட்டேன். அந்த ஊர்வசிதான் என்னோட இந்த மாறுதலுக்கு வித்திட்ட புண்ணியவதி. உன்கிட்ட நான் மன்னிப்பு வாங்கிக்கவேணும். சோதனை இல்லாட்டா, வாழ்க்கையே சுவையற்றுப் போயிடும்போல!... நீ திடமாயிரு. அப்பத்தான் எனக்கும் தெம்பாயிருக்கும். நான் அடிக்கடி வந்து உன்னைக் கவனிச்சுக்கிடுவேன். போய்வரட்டுமா?" ஒளிவெள்ளம் வழிந்தது. அவள் அன்பின் விழிகளை மலர்த்தி. " ேப யி ட் டு வாங்க சார்!" என்று வலது கையை அசைத்தாள். வெளுத்துப்போயிருந்த கவர்ச்சிமிகுந்த அவளது முகத்தில் புன்னகைக் கீற்று வெடித்தது; அவளது குவளைக் கண்கள் நீர்ப்பீலியாயின. - அம்பலத்தரசன் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு புறப்படலானான். சந்தடிமிகுந்த தங்கசாலை பின்தங்கியது. ஒளியும் நிழலும் கலந்த இயற்கையின் செயற்கைக் கோலத்தை ரசித்தவனாக, அடிவைத்து அடிபிரித்து நடந்த அம்பலத்தரசன், ஸ்டான்லி யை நெருங்கிய தருணத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/101&oldid=1284044" இலிருந்து மீள்விக்கப்பட்டது