பக்கம்:கதாநாயகி.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94*கதாநாயகி



"அத்தான் என்ற உறவுச் சொல்லின் புனிதமான புதுமையை அவன் அப்போதும் துல்லிதமாக உணரலானாள்.

"வாங்க, சாப்பிடலாம்," என்றாள் மீனாட்சி அம்மாள்; சொல்லிக்கொண்டே, கூடத்தில் 'தடுக்கை' ப் போட்டாள். சாப்பாட்டுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் சுறுசுறுப்பாகச் செய்தாள்.

ஊர்வசி தண்ணீர்ச் செம்புடன் வந்து அவனிடம் நீட்டினாள். "கை கழுவுங்க," என்றாள்.

"இதோ வருகிறேன்," என்று மூலைப்பகுதியை நோக்கினான்.

"நேரே போங்க, வழுக்கும். பார்த்துப் போங்க. வழுக்கி விழுந்திடாதீங்க!..."

அவன் புன்னகையோடு அவள் சுட்டிய பகுதிக்கு எச்சரிக்கையுடன் போய்த் திரும்பினான். கைகால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே நுழைந்தான். பெரிய இருமலொன்று வெடித்தது.

"இனிமே நீங்க சிகரெட்டைக் குறைச்சுங்குங்க. அதாலே தான் இப்படி இருமுது." அவள் அவனைப் பரிதாபத்துடன் பார்த்தாள், அப்பார்வையில் நம்பிக்கை இருந்தது.

"ஆகட்டும்." என்று சொல்லித் தலைமை இணக்கமுடன் உலுக்கினான் அவன். அவள் வேண்டுகோளை அவன் ஆணையாகவே மதித்தான்.

கோழிப்பிரியாணி படைக்கப்பட்டது. அதன் சூடு, தலைவாழை இலையின் ஓரப்பகுதிகளைக் கன்றச் செய்தது.

"சாப்பிடுங்க."

"நீயும் சாப்பிடு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/104&oldid=1319132" இலிருந்து மீள்விக்கப்பட்டது