பக்கம்:கதாநாயகி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கதாநாயகி


"உங்க அன்பை நான் அடையக் கொடுத்துவச்சதிலே sa - 2 .-- o ?? எனக்குத்தானுங்களே லாபம்?... "அப்படியா?.... நம் இருவர் அன்பும் அப்படிப் பார்த்தால் லாப நஷ்டம் கடந்தது!... ஆமாம், ஊர்வசி! "உங்க கொள்கையும் மெய்தானுங்க, அத்தான்! அவன் வெங்காயத் தயிர்ச் சட்டினியில் மிச்சமிருந்த கரித் துணுக்குளைத் தோய்த்துச் சாப்பிட்டான். எலும் புத் துணுக்குகள் ஒதுங்கின. எலுமிச்சம்பழத் துண்டைத் சப்பி துப்பினான். குவளைத் தண்ணிர் காலி! அவள் எழுந்து முதலில் கையலம்பினாள். அவனுக்கு தண்ணீர் கொடுத்தாள். அவன் கையை டவலினால் துடைத்துக் கொண்டு உட்கார்ந்தான். ரேடியோவின் வீணாகாணம் அதியற்புதமாகப் பரிமளித்தது. 'ஹம்ஸத்வனி ஆயிற்றே! கலையுணர்வின் பரிணாமத்தால் நிறைவெய்திய அவன், தன் சட்டைப் பையிலிருந்த பாடலை எடுத்து அவளிடம் கொடுத்தான். - அவள் பார்த்தாள்; படித்தாள், மெய்மறந்தாள். "உங்கள் சிரிப்பும் சிலிர்ப்பும் எனக்குப் பரவசமூட்டுகிறது!" என்றாள். "உன் சிரிப்பும் சிலிர்ப்பும்தானே எனக்குப் பாடலையே ஊட்டியது?" "அப்படியா?" "ஆமாம்; நீ சிரித்த வேளை அது, ஊர்வசி" என்று தன்னை மறந்த அன்பின் நெருக்கமான ஈடுபாட்டுடன் தெரிவித்தான் அவன். ~

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/106&oldid=1284048" இலிருந்து மீள்விக்கப்பட்டது