பக்கம்:கதாநாயகி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 97


அந்தப் பாடலை மீண்டும் அவள் பார்த்தாள். "என்னுள் நிலைத்து. உன்னுள் நெகிழ்ந்து என்னுள் உயிரீந்தாய் நீ - அன்பால் என்னுள் உயிரானாய் நீ! உன்னுள் நிலைத்து, என்னுள் நெகிழ்ந்து, உன்னுள் உயிர் கண்டாய் நீ என்னை உன்னுள் உயிர் கொண்டாய் நீ! - நான் சிரித்த வேளை அது!... வாழ்வில் நீ சிரித்த வேளை அது!..." வாய்விட்டுப் படித்தாள். "இந்த இடம் அற்புதம்!" "என்வரை அற்புதமான நீ தந்த அற்புதமான பாடல் அல்லவா?" "பத்திரிகைக்காக எழுதினங்களா?" "இல்லை. உனக்காக எழுதினேன்; எனக்காக 34 எழுதினேன்!... "அப்படியா?" "ஊம்!...” i_! ffi_65}{3}} அவனிடம் சமர்ப்பித்தாள்: "இந்தப் பாடல் என் அந்தரங்கத்தில் பதிவாகிவிட்டது!" அவன் புன்முறுவலுடன் அதை வாங்கிச் சட்டைப்பையில் திணித்தான். அப்போது, ஊர்வசியின் கடிதம் கைவிரல் ஸ்பரிசத்தில் தட்டுப்பட்டது. தன் நெற்றியில் அவள் நேற்றிரவு தலைவலி மருந்தைத் தடவியபோது, அவள் கைப்பட்டவுடன், தான் அனுபவித்த அந்த ஸ்பரிச சுகம் மீண்டும் புனர்ஜன்மம் எடுத்திருக்க வேண்டும். இமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/107&oldid=1284049" இலிருந்து மீள்விக்கப்பட்டது