பக்கம்:கதாநாயகி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( « ធ្ឫស្ណក្រៅ வாடிக்கைக் கடைகள் அதிகம் இருந்தாக அவர் يجمعه. துண்டு. கடையின் அதிபர் அந்தக் கடைக்கு வாய்த்த நல்ல விளம்பரம். மனிதர் கும்பகோணம் வெற்றிலையைக் காம்புகிள்ளி நரம்பு நீக்கிப் போட்டுக் கொண்டு, பன்னீர்ப் புகையிலையை உள்ளடக்கிப் பேசும் பேச்சைப் பார்த்தால், தாம்பூலப் பித்து யாரையும் ஒரு கலக்குக் கலக்கியே திரும். அம்பலத்தரசனும் இப்படிப்பட்ட பழக்கத்துக்கு அடிபணிந்தவன்தான். வெற்றிலை தரித்துக் கொண்டான் அவன். நீட்டப்பட்ட சிகரெட்டை வாங்கிய அவன், ஊர்வசியின் ஆக்ஞையைச் சிந்தையிற் கொண்டதும், அதைத் திருப்பிக் கொடுத்தான். கடைக்காரர் அதிசயம் பூத்தார். 'சரி இந்த வருஷம் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சார்பிலே தமிழில் சிறந்த நூல்களுக்குப் பரிசளிக்கப்பட்டதே. அதைப்பற்றி இந்தப் பத்திரிக்ைகைக்காரர்கள் அவ்வளவு தூரம் உரிய விளம்பரம் கொடுக்கலையே, கவனிச்சிங்களா லார்?" என்று கேட்டார் கடை முதலாளி. "வாஸ்தவந்தான். இரண்டொரு ஏடுகள் நல்ல முறையில் பாராட்டி எழுதின. இரண்டொரு ஏடுகள் கட்டின வீட்டுக்குக் குறை சொல்லவென்று கடுவன் பூனையாட்டம் காத்திருந்து குறை சொல்லவும் தவறவில்லையே? அதையும் கவனிச்சிங்களா, சாமிநாதன்?" "ஆமாம்; அதுதான் நம் தமிழ் இலக்கியத்துக்கு ஏற்பட்டு வருகிற ஒரு தலைவலியாச்சே?. இப்பத்தான் ஞாபகம் வருது: தமிழிலே நாடக இலக்கியம் உண்டாகவில்லையாம். இப்படியும் ஒரு சாரார் பேசிக்கொண்டுதானே வருகிறாங்க!. இவங்களுக்கு நீங்க இன்னும் பலமான ஒரு அடி கொடுக்க வேணுமுங்க, உங்க 'பூ மூலம்1. தட்டிக் கேட்கிறதுக்கு ஆள் இல்லாட்டா, தம்பி சண்டப்பிரசண்டன்னு நம்ம ஜில்லாப் பக்கத்திலே ஒரு பேச்சு உண்டில்லையா? அதன் பிரகாரம், அப்போதைக்கப் போது, குறை சொல்லுறவங்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/112&oldid=765988" இலிருந்து மீள்விக்கப்பட்டது