பக்கம்:கதாநாயகி.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104*கதாநாயகி



முத்துமாரிச் செட்டித் தெருவின் செம்பாதி, பின்தங்கியது.

அறையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த அம்பலத்தரசனுக்கு, ஊர்வசியின் நினைவு கிளர்ந்தெழுந்தது. அவள் இல்லாத அந்த இடம் வெறுமையாகக் காட்சியளித்தது. ஊர்வசியைத் தேடிச் செல்லத் துடித்தான். அவளை இங்குவரச் சொன்னதை எண்ணி, அந்நினைவை மாற்றிக்கொண்டான். மேஜையில் இருந்த அவளது டைரியை எடுத்துப் பெட்டிக்குள் திணித்தான். அவளிடம் அவள் டைரியைக் கொடுத்துவிட வேண்டுமென்றும் ஞாபகப்படுத்திக் கொண்டான் அவன். 'மறைந்து கொண்டும், மறைத்துக் கொண்டும் வாழ்ந்து வருகிற மனிதப் பிராணிகள் நலிந்திருக்கிற இந்த உலகத்திலே, ஊர்வசி ஒர் அபூர்வம்! அந்த அபூர்வத்தில் எனக்கு ஒர் இடத்தைப் பெற்றுக்கொண்டால் அதுவே எனக்கு ஆத்ம திருப்தி தரும்!...

அன்றிரவு ஊர்வசி தன் அறையில் நம்பிக்கையின் நிர்மலத்தோடு, நிஷ்களங்கத்தின் நோன்போடு உறக்கம் கொண்டிருந்தபோது, அழகு கொஞ்சிய அவளுடைய மார்பகத்தில் காணப்பட்ட அந்த ரத்தத் தழும்பை அவன் இப்போதும் நினைக்கத் தவறிவிடவில்லை. அதே தருணத்திலே, 'பூ' காரியாலயத்தை விட்டுப் புறப்பட்ட பூமிநாதனின் மார்பில் தெரிந்த ரத்தத்தழும்பையும் அவன் ஞாபகப்படுத்திக் கொள்ளத் தவறிவிடவில்லை!... எதையோ ஆராய்ந்தவன் போல ஒர் அரைக்கணம் கண்களை மூடிச் சிந்தித்தான். 'என் ஊர்வசியைக் கெடுத்த துரோகி யார்?. அவனை இனம் காணமுடிந்தால், என்னுடைய இன்னொரு கடமையும் பூர்த்தியாகி விடுமே! ஊர்வசி இத்தகைய கொடுமைக்கு இலக்காவதற்கு முன், அவளை நான் அடையும் பாக்கியம் பெற்றிருந்தால்...? இதுவரையிலும் தோன்றாத இந்தப் புதிய கவலை அவனை ஒரு வினாடி நிலைகலங்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/114&oldid=1319047" இலிருந்து மீள்விக்கப்பட்டது