பக்கம்:கதாநாயகி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 ❖ கதாநாயகி


ஆமாம், இதுதான் காதலுக்குச் சரியான விளக்கம்! எங்கள் காதலே இவ்வுண்மைக்கு பிரத்தியட்சமான சாட்சியல்லவா?

புரண்டன ஏடுகள்.

ஒவியத் திலகம் கே.மாதவனின் மூவண்ணச் சித்திரத்தில் அவன் பார்வை நின்றது.

காதலனும் காதலியும் வள்ளுவத்திற்குச் சாட்சியமானரோ?

'அழகிய குண்டலங்களை அணிந்த இந்தப் பெண் தெய்வமகளோ?

ஆடுகின்ற மயிலோ? அல்லது, மானிடமங்கையோ? அறியாமல் என் மனம் மயங்குகின்றதே!

ஊர்வசியின் சுகந்த நினைவில் அவன் மயங்கினான்.

அன்னையின் நினைவு பீறிட்டது.

அம்பலத்தரசன் கடிதத்தாளை எடுத்தான்.

"அன்புள்ள அம்மா அவர்களுக்கு”

இங்கு நான் சுகம். அதுபோல் அங்கு தங்கள் சுகத்துக்கு எழுதவும். தங்கள் கடிதமும், தாங்கள் எனக்கென நிர்ணயித்த பெண்ணின் போட்டோவும் கிடைத்தன.

உங்களது அன்பின் ஆணையைச் சிரமேற் கொள்ளப் பழகியவன் நான். ஆனால், இப்போது, தெய்வம் எனக்கு ஒரு புது ஆணையைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, அபலைப் பெண்ணொருத்தியை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த என்னுடைய முடிவைக் கேட்டால், நீங்கள் என்னை ஆசீர்வதிப்பீர்களென்றே நம்புகிறேன். முகூர்த்தத்துக்கு ஆவணியில் நாள் பார்த்துக் கொண்டு அங்கு வந்து, தங்களையும் இங்கு அழைத்துக் கொண்டு வரஉத்தேசம். தாங்கள் என்னையும் அந்தப் பெண், அதாவது உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/116&oldid=1309587" இலிருந்து மீள்விக்கப்பட்டது