பக்கம்:கதாநாயகி.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116 ❖ கதாநாயகி


பிறந்திட்டுதுங்க. புதுசா ஒரு சினிமா பார்ட்டி எங்கிட்டே 'மூவ்' பண்ணியிருக்காங்க!”

“அப்படியா? கங்க்ராச்சலேஷன்ஸ்!”

“பேச்சுவார்த்தை முடியட்டும். ஆனா எங்க அப்பாருக்குத்தான் இதிலே துளியும் விருப்பம் இல்லை. நான் கெட்டுப் போயிடுவேன் என்று பயப்படுறாங்க!...”

“ஓஹோ?”

“ஊர்வசியைப் பற்றின நாடக விமர்சனம் எப்படி இருந்திச்சுங்க பூமிநாதன்?”

“மிஸ் ஊர்வசியைப் பற்றித்தான் ஸ்பெஷலாக எழுதியிருந்தீங்களே! ஒரு விஷயத்தை சொல்லணும். கற்பழிக்கப்பட்ட கதாநாயகிக்கு சமூகம் ஆதரவு தர வேணும்னு நீங்க கதாசிரியருக்கு அட்வைஸ் பண்ணியிருந்ததை நானும் வரவேற்கிறேனுங்க, அம்பலத்தரசன்! கெடுக்கப்பட்ட கதாநாயகிக்குக் கடலை அடைக்கலம் தந்ததாய் காட்டின முடிவை ஒத்திகையிலேயே நான் பாராட்டினேன்.... ஆனா இப்போ அந்த முடிவு அர்த்த மற்றதாகத்தான் தோணுது எனக்கு! ஆதரவு இழந்த அபலைப் பெண்களுக்கு, இப்படிப்பட்ட மோசடிகளுக்குத் தங்களையும் மீறி ஆளாகிற, அல்லது ஆளாக்கப்படுகிற அபலைப் பெண்களுக்கு இந்தத் தமிழ்ச் சமுதாயம் ஈவிரக்கம் காட்டி அவர்களையும் வாழவைப்பதிலே தான் தமிழ்ப்பண்பாடு செழிக்க முடியும் என்கிற உங்க வாதத்தை நான் மனப்பூர்வமாய் ஆதரிக்கிறேனுங்க. இம்மாதிரியான ஒரு கடமைக்கு எப்போதுமே நான் தயாராகவும் இருப்பேனுங்க!”

“நிஜமாகவா, மிஸ்டர், பூமிநாதன்?”

“நிஜமாகத்தான்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/126&oldid=1330453" இலிருந்து மீள்விக்கப்பட்டது