பக்கம்:கதாநாயகி.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120❖கதாநாயகி


பொருந்தி, பொருத்தம் காட்டின.

அவளைப் பார்த்துவிட்டு, பூமிநாதனையும் அதே ‘பார்வை’ யில் பார்த்தான் அம்பலத்தரசன். அப்போது அவன் நெஞ்சில், பூமிநாதனின் ரத்தம் மண்டிய அந்த மார்புத்தழும்பு விளையாடியது!...

மறுகணம், பூமிநாதன் தன்னைத் தானே குனிந்து பார்த்துக்கொண்டு சட்டையின் பொத்தான்களை வாகுபார்த்துப் பொருத்திக் கொண்டிருந்தான். இடது கைச் சிகரெட் புகை கக்கியது.

“பூவை எடுத்துக் கொள்ளலாமா நான்?” என்று உரிமை பூண்டு அம்பலத்தரசனை ஊர்வசி வினவிய காட்சி பூமிநாதனுக்கு மட்டிலாத மயக்கத்தைக் கொடுத்திருக்கும் போலும்! விரிந்த கண்கள் விரிய, சிலிர்த்த இதழ்கள் சிலிர்க்க. அவன் அம்பலத்தரசனையும் ஊர்வசியையும் மாறி மாறி மாற்றி மாற்றிப் பார்த்தான்.

“ஆஹா!” என்று அம்பலத்தரசன் ஓரிருகணங்கள் கழித்துத்தான் விடை கொடுத்தான்.

அதற்குள் பூ, பூவையை நாடியது. பூவோடு பூ சேர்ந்தது. மணத்தோடு மணம் கூடியது.

ஊர்வசி இருந்திருந்தாற்போல, ஏனோ ‘கடகட’ வென்று சிரித்தாள்.

பென்சிலை நெருடிக் கொண்டிருந்த அம்பலத்தரசன் திகைத்துத் தலையை உயர்த்திவிட்டான்.

காதலி ஸிம்ஸனுக்காக மணி மகுடத்தையே துறந்த எட்டாம் எட்வர்ட் மன்னரின் அதிசயக் காதலைச் சொன்ன குறிப்புகளை நெருடிக் கொண்டிருந்த பூமிநாதன் உடல் குலுங்க, அந்தக் குலுக்கலினால் கைவிரல் இடுக்கில் இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/130&oldid=1330463" இலிருந்து மீள்விக்கப்பட்டது