பக்கம்:கதாநாயகி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீதண்டுமாரியம்மன் அப்பொழுது என்று மில்லாத சிரிப்புடன் - அட்டகாசச் சிரிப்புடன் விளங்கினாள். அழகிய, டாட்ஜி-லிருந்து அழகிய ஊர்வசி இறங்கினாள். பின், ஆசனத்தாழ் விலகி மூடிக்கொண்டது! முன்புறத்திலிருந்து அம்பலத்தரசனும் பூமிநாதனும் இறங்கினார்கள். "வாங்க, மிஸ்டர் பூமிநாதன் இவளை உங்களுக்கு அறிமுகப் படுத்திவைக்கிறதிலே நான் சந்தோஷப்படுகிறேன், என்று அம்மனைச்சுட்டி, "நான் நம்பியிருக்கும் என்னுடைய இரண்டாவது தாய் இவள்' என்று முடித்தாள் ஊர்வசி. பூமிநாதனின் கரங்கள் கூப்பின; கூப்பிய கரங்கள் ஏன் இப்படி நடுங்கித் துடிக்கின்றன? மனம் விரிந்து, கண் விரிந்து, ஜோடி இதழ் விரிந்து கும் பிட்டாள் ஊர்வசி, நித்திலங்கள் கால் விரல்களை முத்தமிட்டன. கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் ஊர்வசி, மணி பதினொன்று, பத்து. . - ஏறுமுகச் சுடரொளி சினம் காட்டத் தொடங்கி

விட்டதோ? "வாங்க, இதுதான் என் வீடு, வாடகை வீடு," என்றாள் ஊர்வசி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/135&oldid=766013" இலிருந்து மீள்விக்கப்பட்டது