பக்கம்:கதாநாயகி.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம் * 13


என்று நிறுத்தினான் அம்பலத்தரசன். பூமிநாதன் பேசிய பேச்சுக்கு இயந்திர ரீதியாகப் பதில் சொன்னானே தவிர, அவன் மனத்தில் சற்று முன்னம் தன் அறையில் நிகழ்ந்த அந்த 'அடைக்கலக்காதை'யின் நினைவும் சிந்தனையின் சிதறல்கள் அவனது உள் மனத்தை ஆட்டிப் படைக்கத் தொடங்கி நிமிஷங்கள் பல கடந்துவிட்ட உண்மையை அவன் அறிந்திராதவனா, என்ன?

அந்தக் கட்டத்தில், உலக உருண்டை எவ்வளவு அந்தரங்கமாகச் சுழல்கிறது...!

மேல்விட்டத்தில் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியின் சன்னமான ஒரு வகைச் சத்தத்தைக் கடந்து, "மிஸ்டர் அம்பலத்தரசன்!" என்று குரல் கேட்கவே, அம்பலத்தரசன் திரும்பினான்; அழைத்த ஆசிரியரின் பக்கமாக நிமிர்ந்தான்.

"உங்க ரெவ்யூ ரொம்பவும் க்ளாஸாக இருக்குதுங்க!"

"ரொம்ப நன்றிங்க எடிட்டர் சார்!... நாடகமும் க்ளாஸாக இருந்திச்சு... என் விமர்சனமும் அதையொட்டி அமைந்திடுச்சுங்க!" என்று வழக்கம் போலவே தன்னடக்கமாகக் கூறினான் அம்பலத்தரசன்.

"மிஸ்டர் அம்பலத்தரசனுக்கு இயல்பாகவே இளகிய மனசு; கல் மனத்தையும் கரைக்கச் செய்யக்கூடிய நாடக் கதை அம்பலத்தரசனின் இரக்க நெஞ்சை மேலும் உருக்கியிருக்க வேணும்!" என்று குறுக்கிட்டான் பூமிநாதன் 'இரட்டைக் குரல்' மாறிவிட்டது.

அப்பேச்சு அம்பலத்தரசனுக்குப் புல்லரிப்பை உண்டு பண்ணியது. அவன் கண்கள் கலங்கின; இதயம் மேலும் நெகிழ்ந்தது. 'இரக்கம் என்பதே ஒரு பெருஞ் சோதனைதான். அதனால்தான் எனக்கென்று இந்தச் சோதனையை விதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/23&oldid=1319037" இலிருந்து மீள்விக்கப்பட்டது