பக்கம்:கதாநாயகி.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பூவை எஸ். ஆறுமுகம் *15


"அப்படியானால், நானும் வெயிட் பண்ணுறேனே! உங்க விமர்சனத்தை நானும் சூட்டோடு சூடாகப் பார்த்த மாதிரியும் ஆகிடுமே!" என்று தெரிவித்தான் பூமிநாதன். கழன்று விட்டிருந்த பொத்தானைப் போட்டுக் கொண்டான் அவன்.

மீள முடியாத தவிப்பில் சிக்கிக் கொண்டான் அம்பலத்தரசன். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் ஒரு கணம் திண்டாடிப் போனான் அவன்.

அவனுடைய தவிப்பைக் கண்டு மனம் இளகிய ஆண்ட வன் அந்நேரத்தில் அங்கு பூமிநாதனின் தந்தை ஸ்ரீமான் சாந்தமூர்த்தியை அனுப்பி வைத்து, அம்பலத்தரசனுக்கு விடுதலை அளித்தான்!

"ட்ராமா முடிஞ்சு ரொம்ப நேரமாகிட்டுதே! உன்னை எங்கெல்லாம் தேடுகிறது, தம்பி?” என்று வருந்தினார் சாந்தமூர்த்தி.

விடைபெற்றான் பூமிநாதன்.

சாந்தமூர்த்தியின் 'பாண்டியாக்' முன்னே செல்ல, பூமிநாதனின் 'டாட்ஜ்' பின்னே சென்றது.

'கடவுளே!' என்று கிளம்பினான் அம்பலத்தரசன். வேர்வை ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது!

சீதளத் தென்றல் வீசியது. **

நிலவு சிரித்துக் கொண்டே இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/25&oldid=1319028" இலிருந்து மீள்விக்கப்பட்டது