பக்கம்:கதாநாயகி.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

(3)


இந்தச் சோதனைகள் விதிக்குச் சொந்தமா? - இல்லை தெய்வத்திற்குத்தான் உரிமையா?

தவிர்க்கமுடியாத ஒரு விபத்து மாதிரி அமைந்துவிட்ட அந்தச் சோதனையைச் சமாளித்தாக வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தோடு, அம்பலத்தரசன் மாடியிலிருந்த தன் இருப்பிடத்தை அடைந்தான். திறந்திருந்த மாடியின் வழியை அடைத்து வரத் திரும்பி மீண்டான்.

அறைக்கதவுகள் திறந்தபடியே இருந்தன.

"மிஸ் ஊர்வசி!" என்று கூப்பிட்டான் அவன். எடுத்த எடுப்பில் அவனது பார்வைக்கு இலக்கானது அவளுடைய ஒயில்மண்டிய முதுகுப் புறம்தான். இடைவெளி விட்டிருந்த முதுகுப் பகுதியின் மேல் வசமாக ஒரு பெரிய நகக்கோடும் தென்பட்டது. நிலாக்கோடு அந்த நகக்கோட்டில் அழகாக விழுந்திருந்தது. கழுத்துச் சங்கிலியின் தங்கச்சரம் வரம்பு கட்டியிருந்தது.

அவன் தொடுத்த குரல் அவளுக்கக் கேட்கவில்லை போலும்!

அவள் தன்பாட்டில் என்னவோ எழுதிக் கொண்டிருந்தாள்.

அவன் மூச்சுவிடாமல் அறைக்குள் நுழைந்து, அங்கு கிடந்த ஒரு பிரம்புச் சோபாவில் உட்கார்ந்து கொண்டான். காலடியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/26&oldid=1319042" இலிருந்து மீள்விக்கப்பட்டது