பக்கம்:கதாநாயகி.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பூவை எஸ். ஆறுமுகம் *17


விழுந்து கிடந்த அன்றையச் செய்தித்தாளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு அதை மேஜையின் மறு ஓரத்தில் பதமாக வைத்துவிட்டு, ஊர்வசியைப் பார்த்தான். இன்னும் கூட, அவன் வந்ததையோ, அல்லது வந்து அமர்ந்ததையோ அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவள் சிந்தை பூராவும் அவள் செயலிலேயே கட்டுண்டிருந்திருக்க வேண்டும்!

எழுதிய தாளின் அடியில் 'எஸ். ஊர்வசி' என்று கையெழுத்துச் செய்ததை அவன் கண்டான். "குமாரி ஊர்வசி!..." என்று மெல்லிய குரலெடுத்துக் கூப்பிட்டான் அம்பலத்தரசன்.

அவள் தலையை உயர்த்தி நோக்கினாள். 'குமாரி ஊர்வசி!...' என்று வேதனையின் விரக்தியுடன் தனக்குத் தானே ஆற்றாமையோடு சொல்லிக்கொண்டாள். பிறகு, குரலில் சற்றே அழுத்தத்தைக் கூட்டி, "நீங்க வந்து நேரமாச்சோ?" என்று கேட்டாள் அவள்.

தான் வந்து சில வினாடிகள்தாம் ஆகியிருக்குமென்று மறுமொழி உதிர்த்தான் அவன். சொல்லிவிட்டு அவன் அவளைப் பார்த்தபோது, சரிந்து விழுந்த மார்பகச் சேலையை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள் அவள். சோளி மினுமினுத்தது. அவன் கண்கள் தாழ்ந்தன. அதே நேரத்தில், அவள் நயனங்களும் கீழே இறங்கி மேலே உயர்ந்தன.

"மிஸ்டர் அம்பலத்தரசன்!"

"சொல்லுங்கள் குமாரி ஊர்வசி"

"ஐயா, தயவு செஞ்சு என்னை ஊர்வசியென்றே அழைங்க இனி!"

சற்று முன் அழைத்த அழைப்பில் இருந்த சத்து, இப்போதைய வேண்டுதலையில் வடிந்திருந்தது. அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/27&oldid=1319063" இலிருந்து மீள்விக்கப்பட்டது