பக்கம்:கதாநாயகி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திறத்தாழ 250 நூல்களுக்கு மேல் தமிழ் உலகிற்கு தனது படைப்புகளை வழங்கியவர் பூவை.

  புதுக்கோட்டை மாவட்டம், பூவைமாநகர் ஈன்றெடுத்த அமரர் பூவை எஸ். ஆறுமுகம் அவர்களுக்கு கார்த்திகை பாலன்', 'இளையபிரான்', 'மறைநாயகன்', 'பிறைகடி போன்ற புனைப்பெயர்களும் உண்டு.
  அவர் ஒரு சிறந்த எழுத்தாளர்; அவருடைய எழுத்துக்கள் சாகாவரம் பெற்றவை. அதனை இலக்கிய ஆர்வலர்கள், நாடகத் துறையினர், திரைப்படத் துறையினர், தொலைக்காட்சி ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டினர்; இன்றும் பாராட்டுகின்றனர். இவ்வளவு சிறப்புத் தகுதிகளுடன் விளங்கிய அவருடைய நூலுக்கு அணிந்துரை வழங்குவது எளிதல்ல. ஆனாலும், அவருடைய மகன் பத்திரிகை ஆசிரியரும், என் அன்பிற்குரியவருமான பூவை மணியின் வேண்டுகோளை தவிர்க்கமுடியவில்லை.
  "வாழ்க்கை என்றால் சோதனை; சோதனை என்றால் வாழ்க்கை; வாழ்க்கையின் சோதனையிலே அல்லது சோதனை வாழ்க்கையிலேதான் பொய்யான மண்ணில் மெய்யாகப் பிறந்தவர்கள் ஆண் - பெண் ஆகியோர். அவர்கள் விளையாட்டே வாழ்க்கை.
  படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்காகவும், இறைவன் சோதித்து பழகுவதற்காகவும் படைக்கப்பட்டவை. அந்தச் சோதனை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுவதே ஒரு கடமை. கோழைகளுக்கு வாழ்வே இல்லை; வேடதாரிகளுக்கும் அப்படியே.
 வாழ்க்கைசாகாவரம் பெற்றிருக்கவேண்டுமானால் சட்டம் குருடாகலாம்; ஆனால் தெய்வம் ஒரு போதும் குருடாவதில்லை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/5&oldid=1307781" இலிருந்து மீள்விக்கப்பட்டது