பக்கம்:கதாநாயகி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கதாநாயகி


சிவந்த நெற்றியில் வெண்ணிரு துலாம்பரமாக விளங்கிற்று. "இனிமேலாச்சும் இந்தத் திருநீறும் தெய்வமும் என்னைக் காக் கட்டும் !" என்றாள் ஊர்வசி, வேதனையின் நெட்டுயிர்ப்புடன். "கடந்தது கனவாகவே தொலையட்டும்! இனி நல்லதே நடக்கும்னு நம்பு!" என்று தேற்றினான் அவன். அவள் தன்னை மறந்து கை கூப்பினாள். அவளுக்கு நேரே நின்றவன் அம்பலத்தரசனே! அவன் சற்று தள்ளி நிற்க முனைந்தான். தெய்வத்துக்கு குறுக்கே நிற்க ஒப்பவில்லை அவன்! "உங்களைக் கும்பிடத்தான் கைகுவிச்சேன். அப்படியே நில்லுங்க, நகராமல்!" பாங்குடன் அஞ்சலி செலுத்தினாள் L' IT❍©Ꭵ. அவன் மனம் உருகியது. "புறப்படலாமா" {! #3 t ుణు போட்டுக் கொண்டான் அவன். "டாக்ஸி பிடிச்சிட்டுப் போயிடலாம்!" "ஆகட்டும்!" "போர்ச்சுகீஸ் சர்ச் தெருதானே? பழைய வீடுதானே?" "ஆமாம்." "நான் எப்போது திரும்பலாம்?" "ஏன் என் உத்தரவைக் கேட்கிறீங்க? உங்க இஷ்டப்பிரகாரம் திரும்பிடலாம். ஆமா, உங்களுக்கு ஆபீஸ் பத்து மணிக்குத்தானே?" •, "ஆமாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/50&oldid=1284001" இலிருந்து மீள்விக்கப்பட்டது