பக்கம்:கதாநாயகி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

வாழ்க்கை நம் கைகளில் இருக்கிறதே ஒழிய, ஜீவன் நம் கைகளில் இல்லை; அது ஆண்டவன் பொற்கரங்களில் உள்ளது. அது ஆண்டவனுக்கே சொந்தம்" என்பதை ஏற்கவேண்டும். இக்கருத்துக்களை மையமாகக்கொண்டு படைக்கப்பட்டதே "கதாநாயகி" என்னும் இப்புதினம்.

  இப்புதினத்தில் நாடக விமர்சகராக அம்பலத்தரசன், நாடக நடிகையாக ஊர்வசி, வில்லன் நடிகராக பூமிநாதன் மற்றும் நாடகத்திற்கப்பாற்பட்டு மீனாட்சி அம்மாள், ஆப்பக்காரி அஞ்சுகத்தம்மாள், கருணாநிதி, மங்கையர்கரசி, லேடி டாக்டர் மரகத மூர்த்தி, இதழாசிரியர் பூவேந்திரன் ஆகிய பாத்திரங்களை உலவவிட்டிருக்கிறார் பூவை.
  இப்பாத்திரங்கள் பேசுவது என்ன என்பதை நீங்களே படித்துப் பாருங்கள். சுவைப்பீர்கள்! மகிழ்வீர்கள்! பயன்பெறுவீர்கள்!
                                             அன்புள்ள, 
                                               துரை ராம
                                           கல்வியாளர், 
               23, பிள்ளையார் கோயில் தெரு,   
               பழையதாம்பரம், சென்னை -45.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/6&oldid=1307795" இலிருந்து மீள்விக்கப்பட்டது