பக்கம்:கதாநாயகி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கதாநாயகி


  • - - * - - #7 - நாடகத்தைப் பற்றிப் பேசுறிங்க, இல்லையா?" என்று

குறுக்கிட்டான்; நினைவூட்டினான். "ஓ மை குட்னஸ்'... ஆமாம். நாடகத்திலே அந்தப் பெண் கற்பழிக்கப்பட்டதைப் பார்த்த ஞாபகத்திலே, அந்தப் பெண்ணோட அசல் பெயரையே சொல் லிட்டேன். பரவாயில்லை!... ஊம், நாடகக் கதாநாயகி பலாத்காரமாய்க் கற்பழிக்கப்படுகிறாள்!... சரி. அவள் தன்னுணர்வு அடைஞ்சதும், உடனே அவள் அலைகடலை நாடிச் சரணடைகிறாள்! இது கதையோட நாடக முடிவு!... ஆனா, இந்த முடிவு நம்மோட தமிழ்ப்பண்பாட்டை ஒட்டி அமைஞ்சிருந்திச்சு. இதுதான் நடக்க வேண்டியது! இல்லீங்களா?. ஆனால், நீங்க இந்த முடிவை ஆதரிக்கலே. அப்படித்தான் உங்க க்ரிட்டிஸிலமும் அமைஞ்சிருந்திச்சு! நீங்க சொல்லுற அந்த முடிவுப்படி அந்த நாடகம் முடிஞ்சிருந்தால், அப்புறம் நம்ம தமிழ்ப் பண்பாடு என்ன ஆகிறது?... இதான் என் சந்தேகம்!...." என்று சொல்லி நிறுத்தினான் கருணாநிதி, அம்பலத்தரசன் அவனை உற்றுப்பார்த்தான். பார்த்துவிட்டு வேதனையோடு சிரித்தான். "முதலிலே என் சந்தேகத்துக்குத் தயவு பண்ணி விளக்கம் கொடுக்கிறீங்களா? தமிழ்ப் பண்பாடு அப்படின்னு சொல்லுறீங்களே? அதுக்கு விளக்கம் தரமுடியுமா?" என்று கேள்வி தொடுத்தான் அம்பலத்தரசன். - - "பெண்ணுக்குக் கற்புதான் உயிர். அத்தகைய கற்பு பறிபோயிட்டால், உடனே அவள் தன் உயிரைப் போக்கிக் கிட வேண்டியதுதானேப் பெண்ணுக்குரிய விதி!. இதைத்தான் தமிழ்ப் பண்பாடுன்னு சொல்லுறோம். இதுவேதான், காலம் காலழாய் நம் தமிழ்நாட்டிலே மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருது!...." என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டான் கருணாநிதி, - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/84&oldid=1284029" இலிருந்து மீள்விக்கப்பட்டது