பக்கம்:கதாநாயகி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 75


"ஆல்ரைட்.... அநீதியாய்க் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நீங்க கொடுத்த முடிவு இது! இதைத்தான் நீங்க தமிழ்பண்பாடுன்னு சொல்றீங்க! ஆனா, அநியாயமாகக் கற்பழிக்கப்பட்ட பெண் கடலிலே விழுந்து செத்திட்டால் மட்டும், அவளுக்கு உண்டான அந்த அவப்பெயரும் அவளோடேயே செத்திடும், உடனே நம் தமிழ் பண்பாடு காப்பாற்றப்பட்டுவிடும்னு நீங்க நம்புறீங்களா?...." என்று அடுத்த வினாவைச் சொடுக்கினான் அம்பலத்தரசன். மனயாழ் சோகச் சுருதி கூட்டியது. கருணாநிதி இமைப்பொழுது இமைக்காமல் இருந்தான்; லேசாக அரும்பியிருந்தது வேர்வை. "அந்த அவப் பெயர் எப்படி மறைய முடியும்?" என்று அம்பலத்தரசனையே கேள்வி கேட்டான் அவன். "கற்புநிலை தவறிய" அந்நிலைக்குப் பலாத்காரமாக ஆளாக்கப்பட்ட அந்த பெண், செத்தால்கூட மறைய முடியாத அவப் பெயரோடே வாழ்ந்தால் மட்டும், என்ன குடி முழுகிப் போயிடும்? சொல்லுங்க கருணாநிதி, சொல்லுங்க!..." அம்பலத்தரசன். $: என்று உணர்வுச் சுழிப்புடன் பேசினான் அவளை உலகம் தூற்றாதா?" "உலகம் யாரைத்தான், எப்போதுதான் துற்றவில்லை?" "அப்படின்னா, கெட்ட பெண்களுக்கு இந்த லோகத்திலே இடம் உண்டுன்னு வாதாடுறீங்களா, அம்பலத்தரசன்?" "கெட்ட பெண்களுக்கல்ல, தங்களையும் மீறிக் கெடுக்கப் பட்ட பெண்களுக்கு இந்த உலகத்திலே தாராளமாக இடம் உண்டு. இதுதான் என் வாதம். கெட்ட பெண்களைப் பற்றிய பிரச்னையை இப்போது நாம் பேசவேண்டியதில்லை. அது ஒரு தனி உலகம். இப்போ நான் பேசுறது, பிறராலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/85&oldid=1284030" இலிருந்து மீள்விக்கப்பட்டது