பக்கம்:கதாநாயகி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொக்கினுள் உயிர் மணக்கும் வாசமெனத் தோன்றினாள் ஊர்வசி. அழகுணர்ச்சியோடு அழகை அனுபவிக்கும் பந்தத்தோடு பாந்தத்தோடு அவளை ஆழமாகப் பார்வையிட்டான் அம்பலத்தரசன். ஊர்வசி புனிதம் ஏந்திப் புன்னகை கூட்டினாள்; "வாங்க. உங்களுக்கு முந்தி நான் வந்திட்டேன்" என்று கூறினாள் அவள். நட்சத்திரப் பூக்கள் அவளது கொண்டைப் பூக்களில் மொய்த்திருந்தன. - அவளது பேச்சு அவனுக்கு விடுகதை போட்டது. அவள் இந்நேரம் எங்கே போயிந்தாள்? - அவளது நெற்றித் திலகத்தைச் சுற்றிலும் வேர்வை முத்துகள் மின்னின. உள்ளங் கைகளைத் தடவி விட்ட வண்ணம், வண்ணம் ஏந்திய ஆச்சரியத்தை வினாவாக்கி அவளை மீண்டும் நோக்கினான் அவன். கூடம். "நல்ல பாடத்தைப் பிரத்யட்சமாச் சொல்லிக்கொடுத்திட்டீங்க, இதயமில்லாத அந்தப் பெரிய இடத்துப் பிள்ளைக்கு" ... என்று தெரிவித்தாள் அவள். உணர்வின் தீவிரம் பொங்க W

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/91&oldid=766108" இலிருந்து மீள்விக்கப்பட்டது