பக்கம்:கதாநாயகி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 கதாநாயகி


3線 笠を s ५ ф. * $3. "நீங்க... நீ வந்திருந்தியா, ஊர்வசி? "ஊம். உங்களைக் காணோமேயென்று உங்களைத் தேடி வந்துக்கிட்டிருந்தேன். பூரா நடப்பையுமே என்னாலே பார்க்க முடிஞ்சது!" "அப்படியா? "ஆமாம்!" "தர்மத்தை உணர்த்தியதுக்கு எனக்கு ஏச்சும் பேச்சும் கிடைச்சது தர்மத்தை உணராததுக்கு அவனுக்கு மாறிமாறி அறை கிடச்சது!" என்று ஆறாத வேதனையோடு பேசினான் அவன். "அந்தப் பாவி கடைசியிலே உங்கக் கிட்டே சவால் விட்டதும், தன்னிஷ்டமில்லாமல் கெ டுக்கப்பட்ட அபலைப் பெண்ணுக்குக் கட்டாயம் வாழ்வு தருவேன், அந்த மனம் எனக்கு இருக்குது அப்படின்னு நீங்க விடை சொன்னவுடனேயே நான் வந்து, இதோ பாரய்யா உதாரணப் பொருளை, அப்படின்னு நிரூபிக்கத்தான் எனக்கு மனசு துடிச்சுது. ஆனால், அதுக்குள்ளே பேச்சு தடம் மாறிப் போகையிலே நான் கம்முன்னு நின்னிட்டேன்!... உங்க விமர்சனத்துக்கு அப்பாலேயும் நீங்க நல்ல நல்ல கருத்துக்களைச் சொன்னிங்க.. ஆனால், இப்படிப்பட்ட பாவிகளையுந்தானே பூமி மாதா பொறுமையோடு தாங்கிக்கிட்டு இருக்கிறாள்?..." - பேசி விட்டு அவள் சிந்தனை வசப்பட்டாள். அவளது முகத்தின் எழில் மங்கி வந்தது. அவளது முகமாற்றம் உள்ளத்துச் சலனம் காரணமாக ஏற்பட்டிருந்த முகமாற்றம் அவனுக்குப் புரிந்தது. "ஊர்வசி" பாவிகளுக்கும் ,துரோகிகளுக்கும், இதயமற்ற மிருகங்களுக்கும், தர்மமும் தெய்வமும் கூலி கொடுக்காமல் தப்பாது. ஆமா, தண்டனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/92&oldid=1315907" இலிருந்து மீள்விக்கப்பட்டது