பக்கம்:கதாநாயகி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 83


கொடுக்காமல் தப்பவே முடியாது!... மனச்சாட்சிக்கு பதில் சொல்லாமல், தெய்வத்துக்கும் தர்மதேவதைக்கும் பதில் சொல்லாமல் தப்பிச்சிடுறவங்களுக்கு நம்மைப் போல் உள்ளவங்கதான் தண்டனை கொடுத்தாகவேனும்!..." என்று உத்வேகத்தோடு எடுத்துக்காட்டினான் அம்பலத்தரசன். இப்பேச்சைக் கேட்டதும், அவளது முகச் சலனம் சமன்நிலை அடைந்தது. "நம்மைப் போல் உள்ள வங்களாலேதான் பாவிகளுக்கு ப் பாடம் சொல்லிக்கொடுக்கவும் முடியும்! நீங்க சொன்ன பேச்சு நூற்றுக்கு நூறு மெய்தானுங்க!" என்றாள் ஊர்வசி. தீவிரமானதொரு வைராக்கியப்பண்பு அவளுள் கனன்று கொண்டிருந்ததை அவளது குரல் கோடிட்டுக் காட்டியதோ? பற்களை நற நற வென்று கடித்துக் கொண்டாள். மறுபடியும் பழைய சலனம் கோடு கிழித்தது. அவள் வதனக்கிழியில், மறக்கதக்க சலனமல்ல அது? மறக்கக்கூடிய சலனமும் அல்லவே!... {{ - & - ** உட்கார், ஊர்வசி! அவள் மீண்டும் அமைதி பெற்றாள். ஆனாலும் அவளது நெற்றிச்சுருக்கங்கள் மாத்திரம் கூடி நின்றன. மண்டை உள்ளவரை சிந்தனைக்கு ஒய்வேது, ஒழிவேது? அவன் உட்கார்ந்த பிறகு, அவள் உட்கார்ந்தாள். 'சின்னாளம்பட்டிக் கோர்வைச் சேலை அவள் அழகைக் கூட்டியது. 'இரும்புத் திரை ரவிக்கைக்கும் ஊதாவர்ணப் புடைவைக்கும் கனபொருத்தம் உள்பாவாடையின் பிசிறு அவளது பாதச் சிவப்பை மறைத்தது. "வந்த உங்களை உட்காரக்கூடச் சொல்ல ஞாபகமில்லாமல் நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டு இருந்திட்டேன்." - "அதனாலே என்ன? என் அறையிலே நீ எனக்கு உபசாரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/93&oldid=1284037" இலிருந்து மீள்விக்கப்பட்டது