பக்கம்:கதாநாயகி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கதாநாயகி



நான் உனக்கு உபசாரம் செஞ்சிட்டேன். இதெல்லாம் சர்வசகஜந்தானே!

அவன் சிரிக்க, அவள் சிரித்தாள்.

நினைவோடு அவளிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தவன்போல, "பாவ மன்னிப்புப் பெறவேண்டிய கட்டம் ஒண்ணு மிச்சமிருக்குது!...." என்று ஆரம்பித்தான் அம்பலத்தரசன்.

அவனைத் திகிலுடன் நிமிர்ந்து பார்த்தாள் ஊர்வசி. மார்பகச் சேலையை ஒழுங்குபடுத்திக் கொண்டு, "பாவமன்னிப்பா? ஆமாங்க... பாவ மன்னிப்புப் பிரார்த்தனையை என் ஆண்டவனான கடவுள் கிட்டேயும், என்னை ஆண்டவரான உங்க கிட்டேயும் மானசீகமாய் அப்பவே செஞ்சிட்டேன!" என்றாள்.

"நான் குறிப்பிட்டது, நான் செய்துக்க வேண்டிய பாவமன்னிப்புப் பிரார்த்தனையாக்கும்."

"என்ன சொல்றீங்க நீங்க?"

"நான் ஒண்னும் சொல்லலே. இனிமேல்தான் சொல்லப்போறேன்; அதையும் சொல்லிடுறேன். அப்பத்தான் என் மனச்சாட்சி எனக்குப் பாவமன்னிப்பு வழங்கும். ஊர்வசி, நான் ஒரு பாவி'

"பாவியா நீங்களா பாவி, அத்தான்?"

"ஆமாம், நானேதான் பாவி... உன்னை நேத்து ராத்திரி சந்திக்கிற மட்டுக்கும், என் பார சுமையை நானேதான் சுமந்துகிட்டு, போலியாய் இருந்து வந்தேன். சுருக்கமாகச் சொல்லிடுறேன். தங்களுக்கு விதிச்சிட்ட தலையெழுத்துப்படி: வாழ்வைக் கழிச்ச இரண்டாெரு விலைமாதர்களோடே எனக்கும் தொடர்பிருந்து வந்திச்சு என் பருவக் கோளாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/94&oldid=1349228" இலிருந்து மீள்விக்கப்பட்டது