பக்கம்:கதாநாயகி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 87


மோதிரம் 'டால் அடித்தது. "ஐயா, உங்களுக்குக் கடன்பட்டவள் நான். என்னை அனாதைப் பிணமாக்கிடாமல் கரைசேர்த்திடுவீங்களா ஐயா?... இந்தப் பாவியை ஒரு ஈ, காக்காய் கூட ஏறெடுத்துப் பார்க்க ஒப்பாதுங்க!" அவள் அழுதாள். "நீ அழாதே. உன்னைக் காப்பாத்துறது என் கடமைகளிலே ஒண்ணு. உன் அன்புக்கு நானும் கடன்பட்டவன் தான்!... இனி நீ அனாதையில்லே!... நீ பிழைச்சிடுவே! இதோ பார், இது தான் என் சம்சாரம்!.... கொஞ்ச முந்தித்தான் என்னோட பழைய அத்தரங்க விளையாட்டைப் பத்திச் சொன்னேன் இதுகிட்ட!... என்பேச்சுக்குச் சாட்சி சொல்ல நீ இங்கே இருந்திட்டே! இனிமே நான் பாவியல்ல!..." மங்கையர்கரசி கண்களை உயர்த்தி அம்பலத்தரசனையும் ஊர்வசியையும் பார்த்தாள். "ரொம்ப கொடுத்துவச்ச பொண்ணு இது!" என்றாள். "அதாலேதானே, அதை நான் எடுத்துக்கிட்டேன்!" "தங்கச்சியோட பேர்...? "ஊர்வசி!" "அப்படியா?... ரொம்ப நல்லாக்கவனிச்சிது இது. உங்களுக்கு வேண்டப்பட்டவள்னு மாத்திரம்தான் நான் சொன்னேன் அது கிட்டே. ஆனா, இப்போ இந்தப் பாவியோட கதை தெரிஞ்சப்புறம், என்னை அது முன்னைமாதிரி நேசிக்குமோ, என்னவோ?’ வருந்தினாள் மங்கையர்கரசி, - "அப்படிச் சொல்லாதீங்க. உங்களை எப்பவுமே நேசிக்கத் தவறமாட்டேன், அக்கா. எனக்குப் பகவான் கொடுத்த சீதனம் இந்த மனசுதான். இந்த மனசிலே உங்களுக்கும் இடம் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/97&oldid=1284041" இலிருந்து மீள்விக்கப்பட்டது