பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாக் வழியே 9

ஹரா" என்று கத்தத் தொடங்குகிருர்கள். முதலில் அவர் கள் 'அரோஹரா என்று வெளிப்படையாகச் சொல்ல காணி முணுமுணுக்கிருர்கள் பழைய வாசனை! பிறகு அந்தச் சப்தம் காதிலே புகுந்து மனத்திலே உறைக்கும் போது உதடுகள் அசையச் சொல்கிருர்கள்; அடுத்த தடவை வாய் திறந்து மெல்லச் சொல்கிருர்கள். பிறகு-? என்ன ஆச்சரியம்! எல்லோரையும் விட உரத்துச் சொல்ல வேண்டும் என்ற ஆசையோ என்னவோ! தம் தொண்டை யின் வலிமை முழுவதையும் கூட்டி அரோஹரா என்று முழங்குகிரு.ர்கள். அடியார் கூட்டம் அதில் சேர்கின்ற எல் லோரையும் மயக்கி விடுகிறது; தன் வசமாக்கி விடுகிறது: எல்லோரையும் ஒரேமாதிரி இயக்கிவிடுகிறது.

'அரோஹரா போட்ட பிறகு உடம்பு புல்லரிக்கிறது: வேர்க்கிறது; ஒருவிதமான மதமதப்பு ஏற்படுகிறது. இது வரையில் நாம் கால எடுத்து வைத்தோம் கையைத் தலை மேலே கூப்பினேம்; அரோஹரா என்று கூவினுேம் இந்தப் புதிய உணர்ச்சி ஏற்பட்ட பிறகு கால் தானுகவே கடக்கிறது; கை தானுகக் குவிகிறது; வாய் தானகவே முழங்குகிறது. உடம்பு வேறு, காம் வேறு என்பது போன்ற உணர்ச்சி உண்டாகிவிடுகிறது. கால்கள் என்ற சக்கரத்தின் மேல் உடம்பாகிய வண்டி செல்ல, அதன் மேலே நாம் சுகமாக அமர்ந்து செல்வது போலக் தோன்றுகிறது. மைல் கணக்காக கடந்தாலும் வலியோ இக்ளப்போ தோன்றதென்ற உறுதி ஏற்படுகிறது. நம்மை அறியாமலே கண்ணிர் வழிகிறது. உடம்பு பஞ்சுபோல, ஆகிக் கனம் குறைந்து விட்டதுபோலத் தோன்று

என்ன அற்புதமான அநுபவம்! -

கற்பனை யாத்திரையிலிருந்து விழித்துக்கொண்டேன். என் கண்களில் நீர் அரும்பி இருந்தது. அன்பர்கள் பார்க்