பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கதிர்காடி யாத்திரை

நம்முடைய மனத்திலே இனிய எண்ணங்களேயும், தூய கினேவுகளையும் எழுப்புவதில்லையே! இந்த மாணிக்க கங்கையோ, அன்பர்களுடைய மனத்தில் மணி மணியான காட்சிகளே கினைக்கச் செய்தது. -

இலங்கையில் எல்லா ஆறுகளேயும் கங்கை என்றே வழங்குகிருர்கள். மாவலி கங்கை என்ற ஓர் ஆற்றைக் கூட நான் பார்த்தேன். ஆற்றைச் சிங்கள மொழியில் ஓயா என்று சொல்வார்கள். மாணிக்க கங்கையின் சிங்களப் பேர் பரப்ப ஓயா என்று ஓர் அன்பர் எழுதியிருக்கிருர்,

மாணிக்க கங்கையின் கரையிலே நின்ருேம். அங்கே ஒரே ஒரு சிறிய கடை இருந்தது. "கோவிலுக்குப் போவ தற்குப் பழம் தேங்காய் எல்லாம் வேண்டாமா? என்று கடைக்காரன் கேட்டான். அழகிய ஆற்றைக் கண்டபிறகு அதில் ரோடாமல் போவதா? கண்பர்களும் நானும் மாணிக்க கங்கையில் ரோட முற்பட்டோம். அப்போது பத்து மணி யிருக்கும். வெயில் கன்ருக விசி அடித்தது. ஆகவே ஆற்றில் ரோடுவது மிகவும் சுகமாகத்தானே இருக்கும்? - . . .

மாணிக்க கங்கையின் இருபுறமும் மிக உயர்ந்த மருத மரங்கள் வளர்ந்திருந்தன. என் கண்னுக்கு இலங்கையி லுள்ள எல்லா மரங்களுமே மிக உயரமானவைகளாகவே தோன்றின. அங்கே வளரும் பலாமரம், கம் ஊர்த் தென்ன மரத்தின் உயரம் இருக்கிறது. அப்படியானுல், இயற்கையாகவே ஓங்கிப் பருத்து வள்ரும் மருத மரத் தைப் பற்றிக் கேட்பானேன்? அர்ஜுன விருட்சம் என்று. மருத மரத்துக்கு வடமொழியில் பெயர் வழங்கும். தமிழ் நூல்களில் நீர் வளமும் நிலவள்மும் நிரம்பியுள்ள இடமா கிய மருத நிலத்துக்கு இந்த மருதமரந்தான் அடையாளம். வயலும் வயலைச் சார்ந்த இடமுமாகிய மருதம் என்ற திணக்குப் பெயர் கொடுத்தது மருத மரம் எங்கே ர்ே வளம் உண்டோ அங்கே மருதம்ரம் வள்ரும். - - - : *