பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழாக் காட்சிகள் 31

கதிர்காமத்திற்கு இந்திய முஸ்லிம்களில் அநேகர் வந்து போகிருர்கள் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக் தோம். கதிர்காமத்திலுள்ள மாணிக்க கங்கையின் ஒரத் தில் ஓர் ஊற்றுண்டென்பதும், அந்த ஊற்றுத் தண்ணி ரைப் பருகியவர் சிரஞ்சீவியாக இருக்கமுடியும் என்பதும் அவர்கள் கொள்கை. அவர்களுள் கிதிர் கபி என்ப்வர் அந்த ஊற்றுத் தண்ணிரைப் பருகிச் சிரஞ்சீவியாக இருந் தார் என்றும், அவரே இஸ்லாம் மார்க்கத்தை மாலத்திவு முதலிய இடங்களில் பரப்பினர் என்றும் சொல்லப் படுகிறது. அந்த ஊற்று இருந்த இடம் இப்பொழுது தெரியவில்லை? -

பண்டைக் காலக்தொட்டுக் கதிர்காமத்தில் நடத்தும் திருவிழாக்களில் முஸ்லிம்கள் பக்தம் பிடிக்கும் வழக்கம் இருந்து வந்ததாம். பிற்காலத்தில் இந்த வழக்கம் கின்று விட்டது. - - - - - முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் சில பெரிய தலங்களில் முஸ்லிம்களின் தொடர்பும் இருப்பது வியத்தற் குரிய செய்தியாகும். பழனி மலேயின் பின்புறத்தில் முஸ்லிம் கள் தொழும் இடம் ஒன்று இருக்கிற# திருப்பரங்குன் றத்தில் மலேயின் அடியில் முருகன் திருக்கோயில் அமைக் திருக்கிறது. மலக்குமேல் முஸ்லிம்கள் தொழும் கோயில் உண்டு. அதைச் சிக்கந்தர் கோயில் என்பார்கள். 'பூநிஸ்கந்தரே சிக்கந்தர் ஆகிவிட்டார்” என்று முருகன் அடியார் ஒருவர் இதற்குப் பொருள் கூறினர். --

வள்ளியம்மையின் திருக்கோயிலுக்கு மேற்குப் பக்கத் தில் முத்துலிங்க ஸ்வாமியின் சமாதி இருக்கிறது. அங்கே சமாதியின்மேல் சிவலிங்கத்தை அமைத்திருக்கிருர்கள். அங்கே இருந்த ஒருவரை, "முத்துராமலிங்க ஸ்வாமி யார்?" என்று கேட்டேன். அவர் ஒரு கதையைச் சொன்னர்.

காஷ்மீரத்திலிருந்து ஒரு பிராமணர் இங்கே வந்தார். அவரையே முத்துலிங்க ஸ்வாமி என்து பிற்காலத் தில் -