பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கதிர்காம பாத்திரை

வழங்கினர். இங்கே முருகன் மிகவும் சக்தியுடையவனுக. இருப்பதைக் கண்டு அப் பெருமான எடுத்துக் கொண்டு தம் ஊருக்குப் போய்விடவேண்டும் என்று நினைத்தார். அவருக்கு - மந்திரமும் தந்திரமும் கன்ருகத் - தெரியும். கதிர்காம முருகனுடைய சக்தியை ஒரு யந்திரத்தில் ஆகர்ஷணம் செய்து வைத்துக் கொண்டார். அதை ஒருவரும் o அறியாமல் எடுத்துக்கொண்டு இரவோடு, இரவாக ஓடிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தார். ஆளுல் அதற்குள், முருகனே வெளியேற்றும் அக்த ஸ்வாமி. யின் எண்ணத்தை அறிந்த வள்ளியம்மையார். இங்குள்ள சிங்களத் தலைவர்களிடம் கனவிலே வந்து உண்மையைத் தெரிவித்துவிட்டார். வள்ளியம்மையார் சிங்கள வேடர் குலத் திலே உதித்த பெண். இங்கே அவளுக்கும் முருகனுக் கும் கல்யாணம் ஆயிற்று. கனவு கண்ட சிங்களவர் உடனே எழுந்து சென்று முத்துலிங்க ஸ்வாமியைக் கையும். மெய்யுமாகப் பிடித்துக் கொண்டார்கள். அவர் தாம் வைத் திருந்த யந்திரத்தைச் சிங்களவர்களிடம் கொடுத்து, விட்டார். அந்த யந்திரமே கோயிலில் டெட்டிக்குள் இருக்கிற து . ற்சவ காலங்களில் அதையே யானையின் மேல் ஏற்றி ஊர்வலம் செய்விக்கிருர்கள். முத்துலிங்க ஸ்வாமி முருகனே எடுத்துச் செல்ல முடியவில்லையே என்று, ஏங்கினர். அவரால் முருகனைப் பிரிந்திருக்க முடிய வில்லை. இந்தத் தலத்திலேயே வாழ்ந்து வந்தார். கடைசி யில் இங்கேயே சமாதி அடைந்தார். தவத்திற். சிறந்தவர் அவர் -

இந்தக் கதையைக் கேட்டேன். கதை அப்படியே. விகழ்ந்திருக்கும் என்று சொல்ல முடியாவிடினும் உண்மை யின் கரு அதில் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. யந்திரங்களுக்கு மக்களேக் கவரும் ஆற்றல் மிகுதி. பல தலங்களில் தவத்திற் சிறந்த பெரியோர்கள் யந்திரங்களைப் பிரதிஷ்ட்ை செய்திருக்கிருர்கள். அதன் பயனக அத்