பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கதிர்காடி யாத்திரை

மன்ருே துனே? அடியாரிடத்து அஞ்சுமுகம் தோன்றில்ை ஆறுமுகம் தோன்ருதிருக்குமா? இங்ங்னம் கட்டளையிட்ட அரசனேயே இவளுடைய பழி சூழ்ந்தமையால் ஆங்கில அரசினர் அவனைச் சிறைப்படுத்தினர். முருகன் திருவரு ளால் தப்பிய அரச குமாரி கிழவிப் பருவம் வரையும் இருந்து தொண்டாற்றி, கி. பி. 1876-ஆம் ஆண்டளவில் இறைவன் திருவடி நீழலை அடைந்தனள்......இவ்வம்மை யாருடைய சமாதி, கல்யாண மடத்துக்கு அருகில் உள்ள தோட்டத்தில் பால்குடி பாபாவினுடைய சமாதிக்கு அருகில் உள்ளது என்று குல. சபாநாதன் தாம் எழுதிய ' கதிர்காமம்" என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிருர்,

கஜபுரி ஸ்வாமிகள் என்ற அன்பர் ஒருவர் இளமைப் பருவத்திலே வடநாட்டிலிருந்து இங்கே வந்தார். கதிர்காம காதனேக் கண்டு காதல் மீதுர்ந்து இங்கே தங்கினர். கல்யாண மடத்தில் இருந்தார். இயற்கையாகவே வைராக் கியம் பூண்ட அவர் முருகனுடைய சங்கிதானத்திற்கு வந்து பெற்ற உணர்ச்சியால் பின்னும் விருப்பு வெறுப்பற்ற கிலேயை அடைந்தார். மடத்தில் இருந்து அங்கே வரும் கூட் டத்தினருடைய ஆரவாரத்தினிடையே வாழ விரும்பவில்லை. தனியே இருந்து தவம்புரிய வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு எழுந்தது, அவ்வாறே அவர் காட்டுக்குள் சென்று தவம் புரியத் தொடங்கினர். ஒரு வருஷம், இரண்டு வருஷம் அல்ல ; 50 ஆண்டுகள் தவம் புரிந்தார். - -

அப்போது காஷ்மீரத்திலிருந்து ஒரு துறவி தென்னுட் டுத் தல தரிசனத்துக்காகப் புறப்பட்டார். சுரராஜபுரி, என்பது அவருடைய பெயர். அவர் இராமேசுவரம் சென்ருர். அப்போது அவருடைய கனவில் இறைவன், எழுந்தருளி, ! இலங்கையில் உள்ள சிவனடியாத மலைக்கு. வரவேண்டும்" என்று கட்டளை யிட்டான். அப்படியே அந்தத் துறவி சிவனடியாத மென்னும் சமைெளிபாத