பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற செய்திகள் 49

பட்டால் இறைவன் திருநாமத்தை அன்பர்கள் சொன்ன வுடன் அவை ஒடிவிடுமாம். அந்த ஒலியைக் கேட்டுக் கேட்டு, 'இந்த ஒலி வரும் இடத்தை ஒன்றும் செய்யக் கூடாது" என்ற எண்ணம் அம் மிருகங்களுக்கு வந்திருக்க வேண்டும். -

இத்தகைய அற்புதங்கள் இங்கே நிகழ்வதைச் சுப்பிர மணிய க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் பாடுகிருர்:

மாணிக்க நிறைகங்கை ஆடிஉன் இனப்பணி வந்திடும் பூதலத்தோர் - வாய் ஊமர் பாடவும் குருடர்கண் பார்த்திடவும் மலடிகள் மைந்தர்பெறவும் - காணிற் குமாரவே லாவென்னும் அன்பரைக்

கரடிபுலி யானேசிங்கம் காலிற் பணிந்தஞ்சி ஓடவும் கந்தனே

கண்கண்ட தெய்வமெனவே ஆணிப்பொன் முத்திமண் உபமேவு கச்சியினுள்

அடியேனை ஆண்டுகொண்டெள் ஆகத்தில் வந்தபிணி தீர்ந்திடவும் முன்நிற்கும்

ஆறுமுக மெய்த்தெய்வமே ! சேணிற் புலோமசை வளர்த்தபெண் பிடிகணவ !

செங்கீரை ஆடியருளே; தேவரொடு மனிதர்பணி கதிர்காம வேல்னே!

செங்கீரை ஆடியருளே.

- • * : * . . . பிற பாடல்கள்

இத்தல சம்பந்தமாகத் தமிழ் காட்டு அன்பர்களும் இலங்கை அன்பர்களும் பாடிய பாடல்கள் பல. அருணகிரி காதப் பெருமான் பாடிய திருப்புகழ்ப் பாக்கள் பல உண்டு. கதிர்காமத் தலத்தைப்பற்றி அவர் வாக்கில் வந்த செய்தி கள வருமாறு : - . . . . .

4。 -