பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கதிர்காம யாத்திரை

கோயில் அமைத்துக் கடவுளின் திருவுருவங்களே கிறுவிப் பூசித்தனர். அவை அங்கங்கே மக்கள் வழிபட்டு நன்மை பெறும் தலங்களாக விளங்குகின்றன.

தமிழ் காட்டில் தோன்றிய ஆழ்வார்களும், நாயன்மார் களும் தலங்களுக்குச் சென்று வழிபட்டுப் பல பாடல் களப் பாடினர். அரசர்களும் தம் செல்வத்தைப் பயன் படுத்த மிகச் சிறந்த வழி, திருக்கோயிலே அமைத்தலும் ப்ாதுகாத்தலும் என்பதை உணர்ந்து அவற்றைச் செய் தார்கள். இவற்ருல் தமிழ் காடு எங்கனும் திருக்கோயில் கள் எழுந்தன. ஊரானேர் தேவ குலம்", "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பன போன்ற மொழிகளைத் தமிழிலேதான் காண முடியும். ஊர் தோறும் ஆலயங்கள் இருப்பது தமிழ் காட்டிற்கே சிறப்

இலங்கையிலும் தமிழர் குடியேறினர். அங்கும் தலங்கள் சில சில எழுந்தன. முருகவேளுக்குரிய தலங் களில் கதிர்காமம் மிக மிகச் சிறந்தது. அங்கே ஆண்டு தோறும் சென்று வழிபடும் அடியார் பலர். போக்கு வரத்து வசதிகள் இல்லாத பழங் காலத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் இத்தலத்துக்குச் சென்று வழிபட்டர் கள். அப்போது சென்ற மக்களின் தொகை அதிகம்; அவர்களுடைய பக்தியும் கம்பிக்கையும் அதிகம்; அதனல் அவர்கள் அடைந்த பயனும் அதிகம்.

தமிழர்களுடைய பக்தி எத்துணை சிறப்பானது என்ப தைத் தெரிந்து கொள்ள, கடல் கடந்து காடு கடந்து, கல்லும் முள்ளும் கடக்து. வனவிலங்குகளுக்கும் அஞ்சா மல் கதிர்காமத்துக்கு அவர்கள் சென்று வழிபட்டார்கள் என்ற செய்தி ஒன்றேபோதும். இந்த அன்பு நெறிதான் தமிழ் காட்டினரைக் கலை, இலக்கியம், அருள் ஆகிய துறை. களிலே ஈடுபடும்படி செய்கிறது. இந்த கில தமிழ் நாட்டில் மங்கி மறைந்தால் தமிழ்ப் பண்பே மறிைந்து போகும்,

..of