பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மான உடை!” என்று அவர்கள் கூறினார்கள். பிறகு ஊர்வலம் புறப்பட்டது.

சக்கரவர்த்தி ஊர்வலமாக வருவதை தெருவில் எல்லோரும் பார்த்தார்கள். “ஐயோ! ஆடை யின்றி வருகிறாரே” என்று ஒருவராவது சொல்ல வேண்டுமே! அதுதான் இல்லை. ஏன்? அந்த ஆடை யார் யார் கண்களுக்குத் தெரியவில்லையோ அவர்களெல்லாம் முட்டாள்கள் என்ற செய்திதான் ஏற்கெனவே நகர் முழுவதும் பரவி விட்டதே! அதனுல் சில ‘புத்திசாலிகள்’, “அடடா! அடடா! துணியென்றால் இதுவல்லவா துணி! எவ்வளவு அற்புதமாயிருக்கிறது!” என்று புகழவும் ஆரம் பித்து விட்டனர். இப்படி எல்லோரும் ‘புத்திசாலி’களாக நடித்துக் கொண்டிருந்த அச் சமயத்தில் திடீரென்று ஒரு கீச்சுக் குரல் கேட்டது.

“ஐயையோ சக்கரவர்த்தி உடுப்பு இல்லாமல் போகிறாரே!”