பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குரல் வந்த திசையில் எல்லோரும் பார்த்தார்கள். ஒரு சின்னஞ்சிறு பெண்தான் அப்படிக் கத்தினாள். அவள் கூறியதைக் கேட்டதும், “எனக்குக் கூட அப்படித்தான் தோன்றுகிறது” என்றார் கூட்டத்திலிருந்த ஒருவர். இன்னொருவரும் அதே மாதிரி சொன்னார். சில வினாடிகளில், எல்லோரும் சேர்ந்து, “சக்கரவர்த்திக்கு உடுப்பே இல்லையே!” என்று ஒரே குரலில் கூவினர்!

சக்கரவர்த்தி அப்போதுதான் உண்மையை உணர்ந்தார். வெட்கத்தால் தலை குனிந்தார். அத்துடன் ஊர்வலமும் முடிந்தது.

—இது குழந்தைகளுக்காகக் கூறப்பட்ட கதை. குழந்தைகளுக்கு இது வேடிக்கையாக இருக்கும். ஆனால், பெரியவர்களுக்கோ உயர்ந்த கருத்தைப் போதிக்கும்.

இதைப் போல் ஒன்றல்ல; இரண்டல்ல; நூற்றுக் கணக்கான கதைகளைக் கூறினார் ஒருவர். அவர் பெயர்தான் ஆண்டர்சன். ‘ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்’ என்பது அவருடைய முழுப்பெயர். ஆண்டர்சன் எங்கே போனாலும், குழந்தைகளைக் கூட்டி வைத்துக்கொண்டு கதை சொல்லத் தொடங்கி விடுவார். இப்படி ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவருடைய கதைகளைப் படித்துப் படித்து மகிழ்ச்சிக் மூழ்கியிருக்கிறார்கள்.

10