பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பார்த்தார்; வாங்குவதற்கு ஆள் இல்லை. அன்றாடச் சாப்பாட்டுக்கே திண்டாட்டமாயிருந்தது.

அப்போது, காலின் என்னும் ஒரு பெரியவரை ஆண்டர்சன் சந்தித்தார். ஆண்டர்சன் தாம் எழுதிய நாடகங்களையும், கவிதைகளையும் அவரிடம் காட்டினர். அவர் எல்லாவற்றையும் படித்துப் பார்த்தார். எல்லாம் நன்றாகவே இருந்தன. ஆனாலும், அவற்றில் எழுத்துப் பிழைகளும், இலக்கணப் பிழைகளும் ஏராளமாயிருந்தன. ஆண்டர்சனை ஒரு நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் படிக்க வைத்தால், அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று காலின் நினைத்தார். அன்றே ஆண்டர்சனைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தார். 18 வயது ஆண்டர்சன் 8 வயதுப் பிள்ளை களுடன் உட்கார்க்து படிப்பதென்றால் எப்படி இருக்கும்? சிறிய வயதில் சரியாகக் கல்வி கற்காமல் போனோமே என்று நினைத்து, ஆண்டர்சன் வருந்தினார். ஆனாலும், பொறுமையுடன் படித்தார். விடா முயற்சி அவருக்கு வெற்றி தேடித் தந்தது.

பள்ளிக்கூடத்தில் சேர்ந்த ஐந்தாண்டுகளில், ஆண்டர்சன் எழுதிய புத்தகம் ஒன்று வெளி வந்தது. அவர் எழுதிய நாடகங்களில் ஒன்றும் மேடையில் நடிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு, ஆண்டர்சன் சில நாவல்களே எழுதினர். நாவல், நாடகம், கவிதை முதலிய பல துறைகளிலும் அவர் ஈடுபட்டார். அவை-

18