பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏற ஏற, நிறைய நிறையக் கதைகளே அவர் எழுதினார்.

அவர் காலத்திற்குள் மொத்தம் 156 கதைகள் புத்தகங்களாக வெளி வந்தன. ஆனால், அந்தக் கதைகளை ஆரம்பத்தில் படங்கள் இல்லாமலே வெளியிட்டார்கள். அந்தப் புத்தகங்களைப் பார்த்த டென்மார்க் தேசத்துப் பதிப்பாளர் ஒருவர், ‘இந்தக் கதைகளைப் படங்களுடன் வெளியிட்டால், குழந்தைகள் மேலும் குதூகலம் அடைவார்களே!’ என்று நினைத்தார். ஆனால் படங்கள் போடுவதற்கு ஓவியர் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஆண் டர்சனிடமே அப்பதிப்பாளர் ஒப்படைத்தார். ஆண்டர்சன் விருப்பப்படி ‘வில்ஹ் பாடர்சன்’ என்ற ஓவியர் படங்கள் வரைந்தார். அவர் வரைந்த படங்கள் சுமார் 200 இருக்கலாம். அவை யாவுமே மிகவும் நன்றாக இருந்தன. பலரும் அவற்றைப் பாராட்டினார்கள்.

ஆண்டர்சன் அன்னையிடம் கூறியது வீண் போகவில்லை. அழியாப் புகழ் சம்பாதித்துக் கொண்டுதான் அவர் ஊர் திரும்பினார். அவர் திரும்பி வந்தபோது அந்த ஊர் மக்கள் அவருக்கு எத்தகைய வரவேற்பு அளித்தார்கள் ! தெருவெல்லாம் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஊர்வலமாகச் சென்றனர். “ஆண்டர்சன்-வாழ்க! ஆண்டர்சன்-வாழ்க!” என்ற ஒலி வானைப் பிளந்தது.

மறுநாள், அங்கிருந்த எல்லாப் பள்ளிக் கூடங்களுக்கும் விடுமுறை! நகர மண்டபத்-

20