பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்று வியந்தனர். மற்றவர்களும், “ஆமாம், ஆமாம். நிஜப் பன்றி கத்துவது போலவே கத்துகிறான்!” என்று ஆமோதித்தனர். அப்புறம் கேட்கவேண்டுமா ? எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மீண்டும் மீண்டும் அதே வித்தையைச் செய்து காட்டச் சொன்னர்கள். கோமாளியும் திரும்பத் திரும்ப அதே மாதிரி கத்திக் கொண்டேயிருந்தான்.

அப்போது, அந்தக் கூட்டத்தில் ஒரு குடியானவன் இருந்தான். அவனுக்குப் பன்றியைப் பற்றி நன்றாகத் தெரியும். அவன் திடீரென்று இடத்தைவிட்டு எழுந்தான். நேராக மேடைக்குச் சென்றான்.

“சபையோர்களே, இந்தக் கோமாளி பன்றியைப் போலவா கத்துகிறார்? இல்லவே இல்லை. எந்தப் பன்றியும் இப்படிக் கத்தாது. அசல் பன்றியைப் போல் இதே மண்டபத்தில் நாளைக்கு கான் கத்திக் காட்டுகிறேன்” என்று சென்றான்.

சபையோர் கூச்சலிட்டுக் குடியானவனை அவமானப்படுத்த முயன்றார்கள். குடியானவன் விட வில்லை. “நாளை இதே நேரத்தில் இந்தக் கோமாளியும் வரட்டும். நானும் வருகிறேன். இருவரும் இதே வித்தையைச் செய்து காட்டுகிறோம். அப்போதுதான் உண்மையான பன்றி எப்படிக் கத்தும் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றான்.

சபையோருக்குக் குடியானவனுடைய பேச்சிலே அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ‘ஏதோ

24