பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அல்லவா? அதனால்தான் ஈசாப் மிருகங்களையும், பறவைகளையும் பாத்திரங்களாக வைத்தே பெரும் பாலான கதைகளைக் கூறி வந்தார். அவர் கூறிய கதைகளே ஈசாப் இறந்த முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 'பாப்ரியஸ்' என்ற கிரேக்க ஆசிரியர் ஒருவர் முதல் முதலாகத் தொகுத்து எழுதி வைத்தார். பிறகு லத்தீன், பிரெஞ்சு முதலிய மொழிகளிலும் இந்தக் கதைகளைக் கூறி வந்தார்கள்.

பிரெஞ்சிலிருந்து முதல்முதலாக ஆங்கிலத்தில் இந்தக் கதைகளை மொழி பெயர்த்து 1845-ஆம் ஆண்டில் புத்தகமாக வெளியிட்டார்கள். இங்கிலாந்தில் முதல்முதலாக அச்சு இயந்திரத்தை அமைத்த காக்ஸ்டன் என்பவரே அப்புத்தகத்தை அச்சிட்டவர் ! அதன் ஒரு பிரதி இப்போதுகூட பிரிட்டிஷ் மியூசியத்தில் கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறதாம் !

ஈசாப் சொன்ன கதைகளைத் தவிர, ஈசாப்பைப் பற்றிய கதைகள் பல உள்ளன. அவரது புத்தி நுட்பத்தையும், தெளிவான சிந்தனையையும், மக்களிடத்திலே அவர் கொண்டிருந்த மாசற்ற அன்பையும் விளக்கக் கூடியவை அந்தக் கதைகள்.

ஈசாப் அடிமையாயிருந்தபோது, அவருடைய எஜமானர் தம் நண்பர்களிடம் ஒரு பந்தயம் கட்டினார். "சமுத்திரத்திலுள்ள நீர் முழுவதையும் நான்

30