பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடனே வேடிக்கை பார்க்க அங்கு வந்திருந்தவர்கள், “ஆமாம், ஆமாம். அதுதான் சரி” என்றார்கள்.

பந்தயம் போட்டவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வெட்கத்துடன் திரும்பி விட்டனர்.

இப்படி அவர் பல சந்தர்ப்பங்களில் எஜமானரைக் காப்பாற்றியிருக்கிறார். அதனால்தான் அவருக்கு விரைவில் விடுதலை கிடைத்தது.

அவர் அடிமையாக இருந்தபோது மற்றொரு நிகழ்ச்சி நடந்தது.

ஒருநாள் அவருடைய எஜமானர் வெளியூருக்குப் புறப்பட்டார். சாமான்களைத் துாக்கி வருவதற்காகத் தம்முடன் சில அடிமைகளையும் அவர் அழைத்துச் செல்வது வழக்கம்.

அன்று எடுத்துச் செல்ல வேண்டிய சாமான்களை ஈசாப் ஒருமுறை பார்த்தார். பிறகு, மற்ற அடிமைகளைப் பார்த்து, “எனக்கு அதிக கனமில்லாத சுமையைத் தரவேண்டும்” என்று கேட்டார்.

ஈசாப்பிடம் மற்ற அடிமைகளுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. ஆகையால் “சரி, உனக்கு வேண்டிய சாமானை எடுத்துக் கொள்” என்றார்கள்.

உடனே ஈசாப் அங்கிருந்த பெரிய கூடை

32