பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குவித்தார்கள். 'பெரிய பண்டிதராக அந்தக் கிளி விளங்கப் போகிறது' என்று ஊரெல்லாம் பேசிக் கொண்டார்கள். எப்போது பார்த்தாலும், கிளிக் கூண்டைச் சுற்றிப் பெரிய கூட்டம் கூடியிருக்கும்.

ஒருநாள், அரசர் கிளியைப் பார்ப்பதற்காக மண்டபத்துக்குச் சென்றார், மண்டப வாசலில் மங்கல வாத்தியங்கள் முழங்கின. பண்டிதர்கள் உற்சாகத்துடன் மந்திரங்களை உரத்த குரலில் ஓதினார்கள்.

என்ன சொல்லிக் கொடுத்தும் பயன் இல்லை கிளிக்குத் தண்ணிரோ அல்லது தானியமோ கொடுக்கவில்லை. படிப்பு ஏறவேண்டுமே, அதற்காக ஏடுகளைத் துண்டு துண்டாக வெட்டி எழுத்தாணியின் முனையால் வாய்க்குள்ளே திணித்தார்கள். இப்படிச் செய்தால், கிளி எவ்வளவு காலம் உயிரோடிருக்கும் ?

தினமும் அரசர் கிளியைப் பற்றி விசாரிப்பார். அன்றும் வழக்கம்போல் விசாரித்தார். "கிளிக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதை யெல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லிக் கொடுத்து விட்டோம்” என்று பண்டிதர்கள் சொன்னார்கள்.

"கிளி நன்றாகப் படிக்கிறதா ? தாவுகிறதா ? கத்துகிறதா ? இரை தின்கிறதா ?" என்றெல்லாம் அரசர் கேள்வி மேல் கேள்விகள் கேட்டார். எல்லாவற்றுக்கும்,

40