பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவ்வாறே பல பாடல்களை எழுதினர். எழுதிய பிறகு, அவற்றை ஒரு பெரியவரிடம் கொண்டு போய்க் காட்டி, "இந்தப் பாடல்கள் மிக மிகப் பழைய ஒரு புத்தகத்தில் இருந்தன. அப்படியே பார்த்து எழுதிக் கொண்டு வந்தேன். படித்துப் பாருங்கள். எப்படியிருக்கின்றன?" என்று கேட்டார்

அவர், பாடல்களைப் படித்துப் பார்த்தார். "ஆஹா ! எவ்வளவு நன்றாக இருக்கின்றன !" என்றார்,

உடனே தாகூர் சிரித்தார், "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டார் அவர்.

"ஒன்றுமில்லை. விளையாட்டுக்காகச் சொன்னேன். இந்தப் பாடல்களை நானேதான் எழுதினேன்’ என்றார் தாகூர்.

இதைக் கேட்டதும், அந்த மனிதர், அது தானே பார்த்தேன். பாடல்கள் அப்படி ஒன்றும் பிரமாதமாயில்லையே!" என்றார்.

அதற்குப் பிறகு, தாகூர் அந்தப் பாடல்களை “பாரதி'யில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ஆனால், அவர் தம் சொந்தப் பெயரில் அவற்றை வெளியிடவில்லை; 'பானு சிங்கா' என்ற பழங்காலக் கவிஞர் ஒருவரின் பெயரில்தான் வெளியிட்டார்.

46