பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழ் தேடிப்

புறப்பட்டவர்!

வெகு காலத்திற்கு முன்பு ஒரு சக்கரவர்த்தி இருந்தார். அவர் அடிக்கடி உடை மாற்றுவார். ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு விதமான உடை அணிவார். துணி வாங்குவதிலும், துணி தைப்பதிலுமே பணத்தையெல்லாம் செலவிட்டு வங்தார்.

அந்தச் சக்கரவர்த்தியிடம் ஒருநாள் இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இருவரும் பிறரை ஏமாற்றிப் பிழைப்பவர்கள். ஆனால், பார்ப்பதற்கு நல்லவர்கள் போல நடித்தார்கள். அவர்கள் சக்கரவர்த்தியைப் பார்த்து, "நாங்கள் நெசவாளர்கள். நாங்கள் தயார் செய்யும் துணி மிகமிக மெல்லியதாயிருக்கும். வண்ணங்கள் கண்ணைக் கவரும். இன்னொரு அதிசய சக்தியும் அதற்கு உண்டு

620–1 5