பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்தார்கள். சின்ட்ரல்லா அரண்மனைக்குச் சென்று, திரும்பி வந்தது அவர்களுக்கு எப்படித் தெரியும் ?

மறுநாள் காலையில் அரண்மனைச் சேவகன் ஒருவன் ஒரு குழாயை வாயில் வைத்துக் கத்திக் கொண்டே தெருவில் சென்றான். அவன் கையில் ஒரு கண்ணாடிச் செருப்பு இருந்தது.

“எந்தப் பெண்ணின் காலுக்கு இந்தச் செருப்புச் சேருகிறதோ அந்தப் பெண்னை இளவரசர் மனந்து கொள்ளப் போகிறார். கட்டாயம் மணந்து கொள்ளப் போகிறார்” என்று அவன் அறிவித்தான்.

உடனே ஒவ்வொரு வீட்டுக்குள்ளிருந்தும் கலியாணமாகாத பெண்கள் ஓடிவந்தார்கள். அந்தச் செருப்பை வாங்கி அணிந்து பார்த்தார்கள். ஒருவர் காலுக்கும் அது சேரவில்லை. சின்ட்ரல்லா சகோதரிகள் மட்டும் சும்மா இருப்பார்களா? அவர்களும் ஆசைஆசையாக அந்தச்செருப்பை வாங்கிப் போட்டுப் பார்த்தார்கள்; சேரவில்லை. சிறியதாயிருந்தது. எப்படியாவது சேர்த்துவிட வேண்டுமென்று முயன்று பார்த்தார்கள்; முடியவில்லை.

அங்தச் சமயம் சின்ட்ரல்லா அங்கே வந்தாள். கண்ணாடிச் செருப்பைப் பார்த்ததும் அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது. உடனே அவள், “எங்கே அதைக் கொடுங்கள். நான் போட்டுப் பார்க்கிறேன்” என்றாள்.

இதைக் கேட்டதும், அவளது சகோதரிகள் இருவரும் கேலி செய்தார்கள்; கிண்டல் செய்-

59