பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வர். ஆனால், சில ஆண்டுகள்தான் வக்கீல் தொழில் நடத்தினார். பிறகு, அவருடைய தமையனார் ஒருவருக்கு உதவியாகச் சிலகாலம் வேலை பார்த்தார்.

பெரால்ட் மக்களின் மன உணர்ச்சிகளே நன்கு அறிந்தவர். இது பற்றி அவர் பல ஆராய்ச்சிகள் செய்து பார்த்தவர்.

பெரால்ட் கடைசி காலத்தில்தான் குழந்தைக் கதைகளை எழுதினார். ஆரம்ப காலத்தில் பெரியவர்களுக்காகப் பல கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதிப் புகழ் பெற்றார்.

ஒரு சமயம் அவர் ஒரு கவிதை எழுதினார். அதனால் ஒரு பெரிய சண்டையே கிளம்பிவிட்டது. பழமையைப் போற்றுகிறவர்களுக்கும் புதுமையைப் பாராட்டுகிறவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்தச் சண்டை பிரெஞ்சு தேசத்தில் மட்டும் நடைபெறவில்லை; இங்கிலாந்திற்கும் பரவலானது. இதனால், அவரது பெயர் எங்கும் தெரிய வாய்ப்பு ஏற்பட்டது.

பெரால்ட் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தார். பிரெஞ்சு அரசாங்க மாளிகைகளேயெல்லாம் அவர்தாம் நிர்வாகம் செய்துவந்தார். பிரெஞ்சு இலக்கியக் கழகத்திலே அவர் ஒரு முக்கிய அங்கத்தினராக விளங்கினார். அக்கழகத்தில் நடக்கும் தேர்தல்களில் இரகசிய வாக்கு அளிக்கும் முறையை அவர்தாம் முதலில் ஏற்படுத்தினார்.

பெரியவர்களுக்காகவே எழுதி வந்த பெரால்ட்

63